போலீஸ் வாகனத்திலேயே அமர்ந்து மது அருந்திய SSI.. சென்னையில் பகீர்! வீடியோ வைரலான நிலையில் சஸ்பெண்ட்!
சென்னை: சென்னையில் கைதியை சிறைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் லிங்கேஸ்வரன், போலீஸ் வாகனத்திலேயே மது அருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகப் பரவிய நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை உயரதிகார்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
சென்னை பரங்கிமலை ஆயுதப்படையில் லிங்கேஸ்வரன் என்பவர் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். சென்னையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை போலீசார் கைது செய்த பின்பு, அவர்களை சிறைக்கு அழைத்துச் செல்வது, சிறையில் இருந்து ஆஜர்படுத்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வது போன்ற பணிகளில் ஆயுதப்படை போலீசார் ஈடுபடுத்தப்படுவது வழக்கம்.

அந்தவகையில், கைதிகளை அழைத்துச் செல்லும் பொறுப்பில் இருந்த எஸ்.எஸ்.ஐ லிங்கேஸ்வரன், காவல்துறை வாகனத்தில் சீருடை அணியாமல் அமர்ந்து, மது அருந்தும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இந்த வீடியோவை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்திய காவல்துறை உயரதிகாரிகள் எஸ்.எஸ்.ஐ லிங்கேஸ்வரனை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
மேலும், அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், அந்த வாகனத்தில் பயணித்த மற்ற காவலர்களில் யாரேனும் இவரோடு சேர்ந்து பணியின்போது மது அருந்தினார்களா என்றும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications