ரவுடிகள் அட்டகாசத்தை ஒடுக்க புது ஐடியா.. பக்கா பிளான் போடும் சென்னை போலீஸ்! எழுதிக் கொடுத்த 454 பேர்
சென்னை: சென்னையில், குற்ற சம்பங்களில் ஈடுபடும் நபர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். தொழில்புரிய மற்றும் பொருள் ஈட்டுவதற்காக பலர் கிராமங்களில் இருந்து நகரான சென்னைக்கு புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் தற்போது சென்னையில் ஒருபுறம் போதைமாத்திரைகள் உள்ளிட்ட போதப்பொருள் விற்பனை அதிகரித்து வருவதாலும், மறுபுறம் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாலும் சென்னை மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

போதைப்பொருட்கள் புழக்கம்
தமிழகத்தில் போதைப்பொருட்கள் புழக்கம் சமீப காலமாக அதிகரித்துள்ளதாக பரவலாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக தலைநகரான சென்னையில் இதன் நிலைமை மிகவும் மோசம். தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க சென்னை மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு பக்கம் போதைப்பொருட்கள் புழக்கமும் குறைந்தபாடில்லை. பல பெட்டிக்கடைகளில் சங்கேத வார்த்தைகளை பயன்படுத்தி குட்கா உள்ளிட்ட பாக்குகளை வாங்கி பயன்படுத்துவதை மிகவும் சாதாரணமாக பார்க்க முடிகிறது.

ரவுடிகளின் அட்டகாசம்
அதேபோல், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களும் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தும் அளவுக்கு நிலைமை சீர்கெட்டுள்ளது. வாட்ஸ் அப் குழுக்கள் வைத்து போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் பரவலாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இது ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு புறம் ரவுடிகளின் அட்டகாசமோ மேலும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் போதை ஏற்றிக்க்கொண்டு சுற்றும் ரவுடிகள் கடைகளில் மாமூல் வசூலிப்பது, திருட்டு வேலைகளில் ஈடுபடுவது, கத்தி அரிவாள்களுடன் போலீஸ்காரர்களையே மிரட்டுதல் போன்ற பல்வேறு நாச வேலைகளில் ஈடுபடுவது மக்கள் மத்தியில் மேலும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பு நடவடிக்கை
அதேபோல், தலைநகர் சென்னையின் ரவுடிகளின் அட்டகாசமும் அதிகரித்து வருவதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. மாமூல் கேட்டு வியாபாரிகளை தொந்தரவு செய்வது, பொதுமக்களிடம் பணம் கேட்பது, அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வது என ரவுடிகளின் அட்டகாசம் அதிகரிப்பதால் இதற்கும் கடிவாளம் போட சிறப்பு நடவடிக்கையை சென்னை மாநகர காவல்துறை தொடங்கியுள்ளது. இதற்காக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகர காவல் ஆணையர் தொடங்கியுள்ளார். சென்னையை குற்றம் இல்லாத நகரமாக மாற்றும் முயற்சியாக, தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் குற்ற பின்னணி கொண்ட நபர்களுக்கு எதிராக சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குண்டர் சட்டம் பாயும்
இந்த நடவடிக்கையின் ஒருபகுதியாக, 'திருந்தி விட்டேன் இனி குற்ற செயல்களை செய்ய மாட்டேன்' என பிரமாணப்பத்திரம் எழுதிக்கொடுத்த 454 குற்ற பின்னணி கொண்ட நபர்களை கண்காணித்த போலீசார், எழுதிக் கொடுத்தது போல நடந்து கொள்கிறார்களா? என கண்காணித்தும் வருகின்றனர். மேலும், இனி குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சென்னை காவல்துறையின் இந்த சிறப்பு நடவடிக்கை குறித்து மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறுகையில், "சென்னை மாநகர காவல்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குற்ற சம்பங்களில் ஈடுபடும் நபர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் தயங்கமாட்டோம்" என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications