பூந்தமல்லியில் "பூத்த" விஜயகாந்த்.. திருவள்ளூரில் அந்த தெருவில் நுழைஞ்சதுமே.. இதுதான் கேப்டன்.. செம
சென்னை: விஜயகாந்த்தை பற்றின நெகிழ்ச்சி செய்திகளும், அரிய சம்பவங்களும், மனதை உருக வைக்கும் நிகழ்வுகளும் தினந்தோறும் சோஷியல் மீடியாவில் ஆக்கிரமித்து வருகின்றன.. அப்படிதான் இப்போதும் ஒரு செய்தி பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மறைவு தமிழக மக்களை உலுக்கி போட்டுவிட்டது.. பல்லாயிரக்கணக்கான மக்களின் அழுகுரலும், கண்ணீர் கதறலும், சென்னையை அன்றைய தினம் அதிர வைத்திருந்தது.
லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில், தேமுதிக அலுவலகத்தில் சந்தன பேழையில் விதைக்கப்பட்டார் விஜயகாந்த்.. அன்று முதல் இன்றுவரை அவரது நினைவிடத்துக்கு பிரபலங்களும், தொண்டர்களும், பொதுமக்களும் சென்று அஞ்சலி செலுத்தியபடியே உள்ளனர்..

கதறல் அழுகை: அந்த சமாதியில் நின்று பலரும் கதறி கதறி அழுதுவிட்டு செல்கிறார்கள்.. சிலர் அப்படியே பித்துப் பிடித்தவர் போல அமைதியாக உறைந்து உட்கார்ந்து விடுகிறார்கள். மேலும் சிலர், அவரது ஆன்மா சாந்தியடைய பிராத்தனை செய்துவிட்டு சென்று வருகிறார்கள்.
மற்றொருபக்கம், விஜயகாந்த்துக்கு விருது அறிவிக்கப்பட்டுது.. குடியரசு தினத்தை மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது அறிவித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக விஜயகாந்துக்கு இந்த பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர் வைப்பதாக தெரிவித்துள்ளனர்.
கோரிக்கைகள்: இதுபோக, விஜயகாந்த் பெயரை, சாலைக்கு சூட்ட வேண்டும், அவருக்குத் திருவுருவ சிலை அமைக்க வேண்டும் என்பது போன்ற பல கோரிக்கைகளும் எழுந்த வண்ணம் உள்ளன.
இப்படிப்பட்ட சூழலில், எந்தவித கோரிக்கையும் விடுக்காமல், யார் தயவையும் எதிர்பார்க்காமல், பொதுமக்களே, தங்களது தெருவுக்கு விஜயகாந்த் பெயரை சூட்டியிருக்கிறார்கள்..
போட்டோவுக்கு மாலை: திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி அருகே மேல்மனம்பேடு கிராமம், அருகே கீழ் மனம்பேடு என்ற பகுதி உள்ளது.. இங்குள்ள ஒரு சாலைக்கு அந்த கிராமத்தினர், கேப்டன் விஜயகாந்த் தெரு என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.. அதுமட்டுமல்லாமல், விஜயகாந்த்தின் போட்டோவையும் அந்த தெருவில் வைத்து, அந்த திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மரியாதையும் செய்துள்ளனர்.
கிராம மக்களின் இந்த செயல் விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இந்த போட்டோக்கள்தான் இணையத்தில் வட்டமடித்து வருகிறது.. கிராம மக்களின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications