யூடியூபரின் கேள்வி அநாகரீகமானது! கௌரி கிஷனை பாராட்டிய.. சென்னை பத்திரிகையாளர் மன்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை கௌரி கிஷனிடம் உடல் எடை குறித்து அநாகரீகமான கேள்வியை எழுப்பியதற்காக, சம்பந்தப்பட்ட யூடியூபரை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டித்திருக்கிறது. மட்டுமல்லாது, தனது கருத்தை ஆணித்தரமாக வலியுறுத்தியதற்காக கௌரி கிஷனை பத்திரிகையாளர் மன்றம் பாரட்டியிருக்கிறது.

இது குறித்து விடுத்திருக்கும் அறிக்கையில், "அதர்ஸ் திரைப்படம் குறித்து ஊடகவியலாளர் சந்திப்பு 6-11-2025 அன்று நடந்துள்ளது. இச்சந்திப்பில் திரைப்படக் குழுவினருடன் பங்கு கொண்ட திரை கலைஞர் கெளரி கிஷன் அவர்களின் உடல் எடை குறித்து கேள்வி கேட்ட youtubeபரின் செயல்பாட்டை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டிக்கிறது.

Press journalist

திரைப்படம் குறித்து வஊடகவியலாளர் சந்திப்பில் அத் திரைப்படத்தில் பங்களிப்பு செய்த பெண் கலைஞரின் உடல் எடை கேலிக்கு உள்ளாக்கும் நோக்கத்தோடு, கேள்லி கேட்பது அநாகரீகமானது, அருவருக்கத்தக்கது. குறிப்பாக இக்கேள்விக்கு திரை கலைஞர் கௌரி கிஷன் தனது எதிர்ப்பை தெரிவித்த பிறகும் உடல் எடை குறித்து கேள்வியை நியாயப்படுத்தி பெண் திரைக் கலைஞரை நோக்கி கடினமான குரலில் எதிர் விவாதம் நடத்திய youtubeபரின் பத்திரிகையாளர் செயல்பாடுகளை மன்றம் சென்னை வன்மையாகக் கண்டிப்பதோடு இதுபோன்று அருவருக்கத்தக்க ஆணாதிக்க மொழியில் செயல்படுகிறவர்களை சக பத்திரிகையாளர்கள் கேள்விக்கு உட்படுத்த வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்த விரும்புகிறது.

மேலும் பத்திரிகையாளர் சந்திப்பில், கூட்டாக பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் திரை கலைஞர் கௌரி கிஷன் தனது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைத்த செயல்பாடுகளுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கௌரி கிஷனுக்கு நடிகைகள் பலரும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நடிகை என்பதால் அவர்களை பற்றி கிசு, கிசுக்களை எழுதவும், அவர்களை போகப்பொருளாக பார்க்கவும், தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தீர்மானிக்கவும் யாருக்கும் உரிமையில்லை என்று தொடர்ந்து பெண்ணியவாதிகள் கூறி வருகின்றனர். ஆனால், இன்னும் இதெல்லாம் நார்மலான ஒரு விஷயமாக நீடிக்கிறது. இதை எதிர்த்து பேசுவதும், செயல்படுவதும்தான் நார்மலாக்கப்பட வேண்டும் என்று செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+