சென்னிமலை.. பாதிரியார் திரும்ப திரும்ப சொல்லும் 'பின்னணியில் கலவர கும்பல்' - அரசு நடவடிக்கை பாயுமா?
சென்னை: சென்னிமலையை ஏசு மலை அல்லது ஜீசஸ் மலையாக அறிவிக்க கிறிஸ்தவ முன்னணி என்ற அமைப்பு கோரிக்கை விடுத்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட பாதிரியார் அந்த வீடியோவில், கோரிக்கையை எழுப்பியவர்கள் பின்னணியில் கலவரத்தை உருவாக்க நினைப்பவர்கள் இருப்பதாக சந்தேகம் எழுப்பியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
மேற்கு மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக இந்து கோவில்களை முன்வைத்து பிரச்சனைகள் கிளம்புவது, இந்த பிரச்சனைகளுக்காக பல்லாயிரக்கணக்கானோர் திடீரென ஒன்று கூட்டப்படுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழர்களின் புனிதத் தலமாக திகழ்வது சென்னிமலை முருகன் கோவில். ஆனால் சென்னிமலையை ஏசு மலை அல்லது ஜீசஸ்/ கல்வாரி மலை என பெயர் மாற்ற செய்ய வேண்டும் என கிறிஸ்துவ முன்னணியின் கோரிக்கை விடுத்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இதனையடுத்து இந்து முன்னணி ஏற்பாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் சென்னிமலையில் ஒன்று திரண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் பாதிரியார் குணசேகரன் சாமுவேல் இன்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் சென்னிமலையின் பெயர் மாற்றக் கோரிக்கையை வன்மையாகக் கண்டித்திருப்பதுடன் இதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளார். அதே வீடியோவில் பாதிரியார் குணசேகரன், கிறிஸ்தவ முன்னணி என்பதே எங்களுடைய கிறிஸ்தவர்களுக்கே தெரியாத ஒரு புதிய ஏதோ ஒரு காரியமாக இருக்கிறது. எங்களுக்கே அது என்ன வென்று தெரியவில்லை. அது தான் உண்மை" என திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் "வீணான மதக்கலவரத்தை கிறிஸ்தவ முன்னணியினர் கொண்டு வருகின்றார்கள். இதற்கு யாரோ பின்னணியில் இருந்து உதவி செய்வது போல் அறிகிறேன்" என மற்றொரு குண்டையும் வீசியுள்ளார். அதேபோல "வீணாக தமிழகத்தில் மதக்கலவரத்தை உண்டாக்கி வீணான காரியத்தை செய்து வருபவர்கள் மீது அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார்.
அதாவது கிறிஸ்தவ முன்னணி என்பது யாருடைய அமைப்பு ? கிறிஸ்தவ முன்னணியின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை தமிழ்நாடு அரசு கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் பல்வேறு சந்தேகங்களையும் எழுப்புகிறது; ஆகையால் தமிழ்நாடு அரசு விரைந்து இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications