புளியந்தோப்பு பிரபல மிட் நைட் பிரியாணிக்கு ஆசைப்பட்டு போன 3 பேர்.. சென்னை போலீஸை கதறவிட்டது இவரா
சென்னை: சென்னையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தலைதூக்கிய நிலையில், போலீசார் தீவிரமான கண்காணிப்பு மற்றும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.. அதேபோல இரவு நேரத்திலும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில் புளியந்தோப்பு பிரியாணிக்கு ஆசைப்பட்ட 3 இளைஞர்கள், போலீசுக்கு விழுந்தடித்து ஓடியிருக்கிறார்கள்.. என்ன நடந்தது புளியந்தோப்பு பகுதியில்?.
சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். இவருக்கு சொந்த ஊர் தர்மபுரி. சென்னையில் தங்கியிருந்து மத்திய அரசு தேர்வாணைய தேர்வுகளுக்கு தயாராகி வருகிறார்.

அதிகாலையில் பிரியாணி
இந்நிலையில், நேற்று அதிகாலையில் தன்னுடன் தங்கி படிக்கும் லட்சுமி நாராயணன் மற்றும் கபிலன் என்பவர்களுடன் புளியந்தோப்பில் புகழ்பெற்ற மிட் நைட் பிரியாணி கடைக்கு, பிரியாணி சாப்பிடுவதற்காக சென்றிருக்கிறார்கள்..
பெரம்பூர் பிரிட்ஜ் அருகே பைக்கில் இந்த 3 இளைஞர்களும் வந்து கொண்டிருந்தபொழுது, எதிரே வந்த 2 மர்மநபர்கள், 3 இளைஞர்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடமிருந்த செல்போன்கள் பறித்துள்ளனர்... அத்துடன் இதுகுறித்து வெளியே சொன்னால், கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டி விட்டு சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தாமஸ் ஆல்வா எடிசன் புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். ரோந்து போலீசார் அதே பகுதியில் கண்காணித்தனர். அப்போது டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை மற்றும் ஸ்டீபன்சன் சாலை சந்திப்பில் உள்ள பிரபல பிரியாணி கடை முன்பு 2 இளைஞர்கள் நின்றிருந்ததால் அவர்களை விசாரிக்க துவங்கியிருக்கிறார்கள்..
தலைக்கேறிய போதை
ஆனால், அந்த 2 பேரும் தலைக்கேறிய போதையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் போலீசாரின் கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்லவில்லை..
இருவரும் யார் என்று போலீசார் விசாரித்தபோதுதான், புளியந்தோப்பு ஹர்ஷத், சல்மான் பாஷா என்பது தெரியவந்தது.. இதில் சல்மான் பாஷா மீது கொடுங்கையூர், அயனாவரம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட ஸ்டேஷன்களில் ஏற்கனவே 7 வழக்குகள் இருக்கிறதாம்.
அதேபோல, ஸ்டான்லி அரசு மருத்துவமனை சிறை கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்ட போது சல்மான் பாஷா தப்பிச்சென்ற வழக்கு நிலுவையில் இருப்பதும் போலீசாருக்கு தெரிய வந்தது.
போலீசார் விசாரணையை துவக்கியபோதே, போலீசாரை அந்த 2 இளைஞர்கள் கெட்ட வார்த்தைகளில் திட்ட துவங்கினார்கள்.. பிறகு திடீரென போலீசாரை காலால் எட்டி உதைத்தனர்..
இதையடுத்து, போதை இளைஞர்களை ஸ்டேஷனுக்கு அழைத்து செல்ல போலீசார் முயன்றனர். அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்த 2 போதை இளைஞர்களும், போலீசாரை குத்தினார்கள்.. இதில், ஐயப்பன் என்கிற போலீசாருக்கு யூனிபார்ம் கிழிந்து, கையிலும் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.. அதேபோல, சல்மான் பாஷா பீர் பாட்டிலால் தாக்கிய போது காவலர் தீர்த்தமலை கையில் காயம் ஏற்பட்டது.
உடைந்த கண்ணாடி
பிறகு 2 போதை இளைஞர்களையும் அனைத்து போலீசாரும் சேர்ந்து ஜீப்பில் ஏற்றிக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர்.
ஸ்டேஷனுக்குள் நுழைந்ததுமே, 2 போதை இளைஞர்களும் தங்களது சட்டையை கழட்டினார்கள்.. பிறகு தற்கொலை செய்ய போவதாகவும் மிரட்டினார்கள்.. கெட்ட வார்த்தைகளில் போலீசாரை திட்டி கொண்டேயிருந்தனர்.. பிறகு அங்கிருந்த இன்ஸ்பெக்டர் ரூமிலிருந்த கண்ணாடியை உடைத்து தகராறு செய்தனர்.
இதற்கு பிறகுதான் இருவரையும் லாக்கப்பில் அடைத்து, சிறந்த முறையில் கவனிப்பு ஆரம்பமானது.. அதற்குள் விடிந்துவிட்ட நிலையில், 2 பேருக்கும் போதை தெளிந்தது.. பிரியாணி சாப்பிட புளியந்தோப்புக்கு வந்த 3 நபர்களிடம் அபகரித்த செல்போன்கள், டியோ பைக் உள்ளிட்வற்றை போலீசார் பறிமுதல் செய்ததுடன், இருவரையும் ஜெயிலில் அடைத்தனர்..
போலீசாரையே போதையில் எட்டி உதைத்து கத்தியால் கைகளையும், யூனிபார்மையும் கிழித்து, போலீஸ் ஸ்டேஷனில் இந்த 2 போதை இளைஞர்களும் ரகளை செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை உண்டுபண்ணி வருகிறது. தற்போது காயமடைந்த காவலர்கள் ஐயப்ப லிங்கம், தீர்த்தமலை என்பவருக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.












Click it and Unblock the Notifications