சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில்நிலைய பெயர்களை மாற்றக் கூடாது.. கிளம்பியது எதிர்ப்பு
Recommended Video

சென்னை: சென்னையின் பெருமைமிக்க ரயில் நிலையங்களுக்கு பெயர் மாற்றம் செய்யக் கூடாது என்று எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதுகுறித்து, கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அதில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்தின் பெயரை மாற்றம் செய்யக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அரசியல்வாதிகளின் பெயரை வைக்க அரசியல் கட்சிகள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. தற்போதைய ஆளும் கட்சி அந்த கட்சிதலைவரின் பெயரையும், எதிர்கட்சிகள் அவர்களின் கட்சி தலைவரின் பெயரையும் வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மிகவும் கண்டிக்கதக்கது.

பெயர் மாற்றம் கூடாது
இவர்கள் தங்கள் கட்சிதலைவரின் பெயரை வைக்க வேண்டுமானால் அவர்கள் கட்சி செலவில் புதிதாக ஒரு ரயில் முனையம் கட்டி அதற்கு அவர்கள் விருப்பப்பட்ட பெயரை வைத்துகொள்ளட்டும். அடுத்தவரின் குழந்தைக்கு பெயர் வைக்க நாம் போககூடாது. நமது குழந்தைக்கு நாம் பெயர்வைக்கலாம்.

மின்னஞ்சல் முகவரி
ஆகவே தங்கள் எதிர்ப்பை அனைவரும் பதிவு செய்யுமாறு கீழே குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு ஓர் எதிர்ப்பு கடிதம் அனுப்புமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
[email protected], [email protected], [email protected], [email protected],
[email protected], [email protected], [email protected], [email protected],
[email protected], [email protected], [email protected]

ரயில்வேதுறைக்கு கோரிக்கை
இந்த கோரிக்கையுடன் தாம்பரம் ரயில் நிலையத்தின் பெயரை சென்னை தாம்பரம் என்றும், பெரம்பூர் ரயில் நிலையத்தின் பெயரை சென்னை பெரம்பூர் என்றும் மாற்ற வேண்டும். தற்போது சென்ட்ரல், எழும்பூர் வராமல் இந்த இரண்டு ரயில் நிலையங்கள் மட்டுமே ஒரு சில ரயில்கள் நின்று செல்கின்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மெட்ரோவிற்கு பெயர்
அதே நேரம், மெட்ரோ ரயில்நிலையங்களுக்கு பாரத ரத்னா எம் ஜி ஆர் அவர்களின் பெயரை சூட்டுமாறு குறிப்பிட்டுள்ள கடிதத்தையும் அச்சங்கம் நினைவுகூர்ந்துள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications