சென்னையில் இந்த 3 சுரங்கப்பாதைகள் தான் சிக்கல்.. எல்லாமே கிளியர்.. எம்டிசி குட்நியூஸ்
சென்னை: சென்னை, புறநகர் பகுதிகளில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழையால் பல சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியது. இந்நிலையில் சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் தவிர மீதி அனைத்தும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டன. கணேஷபுரம், ஸ்டான்லி நகர், பெரம்பூர் சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அங்கு நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை, புறநகர் பகுதிகளில் மழை விடிய விடிய வெளுத்து வாங்கியது. குறிப்பிட்ட இடைவெளியில் கன முதல் மிக கனமழையும் பெய்து கொண்டே இருந்தது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சென்னையில் உள்பட பல்வேறு சுரங்கப்பாதைகள் தண்ணீரில் மூழ்கின. வடசென்னை பகுதியில் பெரம்பூரில் பல இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால், அந்த பகுதி மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தார்கள். புளியந்தோப்பு பட்டாளம் பகுதியிலும் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கி இருந்தது. இதில் மக்கள் கடும் அவதி அடைந்தனர். அரும்பாக்கம் 100 அடி சாலையில் தேங்கி இருந்த மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். பெரவள்ளூர் காவல் நிலைய வளாகத்துக்குள் தண்ணீர் சூழ்ந்தது.பழைய வண்ணாரப்பேட்டையில் சில இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது.

தென்சென்னை பகுதிகளில் தியாகராயநகர், ஜி.என்.செட்டி சாலை சந்திப்பு, டி.என்.நாயர் சாலை, பசுல்லா சாலையில், தண்ணீர் பெரிய அளவில் பெருக்கெடுத்து ஓடியது. நுங்கம்பாக்கம் சூளைமேடு, பள்ளிசாலை, குளக்கரை சாலைகளில் தண்ணீர் பெருமளவு தேங்கியது. பள்ளிக்கரணை மேடவாக்கம் பிரதான சாலை, ஐ.சி.எப். ரெயில்வே மேம்பாலத்தை ஒட்டிய பகுதிகள், திருவான்மியூர் எல்.பி. சாலை, பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள கந்தன்சாவடி பகுதி ஆகியவற்றிலும் மழை நீர் அதிகமாக தேங்கியது.
பல இடங்களில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் பழுதாகி நின்றன. சென்னையில் பல இடங்களில் மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கான பணிகள் நடப்பதால், மழைநீர் செல்வதற்கு வழி இல்லாமல், சாலைகளில் தஞ்சம் அடைந்தது. வாகனங்கள் அந்த நீரில் தத்தளித்தபடியே சென்றன. இதனால் போக்குவரத்து நெரிசலும் பல இடங்களில் ஏற்பட்டது. மழை விட்டுவிட்டு பெய்ததால், சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கிய படியே இருந்தது.. வெள்ளம் வடிவதற்கு காலஅவகாசமே இல்லாமல் தேங்கியபடியே இருந்தது,
இதனால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் குளம் போல தேங்கியது. இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் இருந்த கடைகள், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் தண்ணீர் அதிகளவில் தேங்கியதால், அந்த பகுதிகளுக்குள் மாநகர பஸ் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது. இதனால் பயணிகள் இடுப்பளவு நீரில் நடந்தே வீடுகளுக்கு சென்றனர். அதேநேரம் மெட்ரோ ரயில் சேவையும், மின்சார ரயில் சேவையும் பொதுமக்களுக்கு ஓரளவு கை கொடுத்தது. இதனிடையே இன்று மழை வெள்ளம் பல இடங்களில் குறைந்துள்ளதால், வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட பல சுரங்கப்பாதைகளில் இயல்பு நிலை திரும்பியது.இந்நிலையில் சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் தவிர மீதி அனைத்தும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டன. கணேஷ்புரம், ஸ்டான்லி நகர், பெரம்பூர் சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அங்கு நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
-
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications