Chennai Rain: பனியில்லாத மார்கழி.. குளிரில்லாத தை.. திடீரென சென்னையில் இன்று பெய்த மழை..!
சென்னையில் திடீரென இன்று காலையில் இருந்து மழை பெய்து வருகிறது
சென்னை: நம் தமிழகத்தில் மார்கழியில் போதிய குளிர் இல்லாத நிலையில், ஜனவரியிலேயே மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது..!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக குறைந்து வரும் சமயம், கடுமையான குளிர் வாட்ட துவங்கும்.. அந்த வகையில், இந்த முறை வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 25-ந்தேதி தொடங்கியது.
நவம்பர் மாதம் முழுவதும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது... ஒருசில மாவட்டங்களில் குறைவான மழைப்பொழிவே இருந்தாலும், இந்த ஆண்டு இயல்பான அளவை விட மழை அதிகமாகவே பெய்திருந்தது..

பனிப்பொழிவு
டிசம்பர் மாதம் துவங்கியதுமே மழை படிப்படியாக குறைய ஆரம்பித்தது.. வானம் மேக மூட்டமாகவும், தெளிவாகவும் காணப்பட்டது.. ஆனால், இரவு நேரங்களில் லேசான பனிப்பொழிவு துவங்கியது.. எப்படியும் நாட்கள் செல்ல செல்ல, நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடுமையான குளிர் காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு குளிர் காணப்படவில்லை..

பனிமூட்டம்
அதிகாலை நேரங்களில் குளிர்ச்சி நிலவியதே தவிர, குளிர் பாதிப்பு குறைவாகவே காணப்பட்டது. எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் டிசம்பர் மாதம் பனிமூட்டமும் குறைவாகவே தென்பட்டது.. இப்போது தை மாதமே துவங்கிவிட்டது.. பனிப்பொழிவு குறைந்து வந்த நிலையில், மாறாக சென்னையில் மழை ஆரம்பமாகிவிட்டது.. கடந்த சில நாட்களாக சென்னையில் அதிகாலையில் பனிப்பொழிவு குறைந்து காணப்பட்டது..

அதிகாலை
இந்நிலையில், இன்று அதிகாலை திடீரென மழை பெய்தது... கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் வரும் 16, 17 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என வானிலை மையம் அறிவித்து இருந்தது. இந்நிலையில், சென்னையில் இன்று காலை திடீரென பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.

ட்ரெண்டிங்
குறிப்பாக தண்டையார் பேட்டை, ராயபுரம், பாரிமுனை, அண்ணா சாலை, சேப்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம், அசோக் நகர், கிண்டி, அடையாறு உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதியில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது... இதேபோல் பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்த வருடம் பனியும் இல்லாமல், குளிரும் இல்லாமல், மார்கழி மாதம் முடிந்துள்ள நிலையில், மழை பொழிவு ஆரம்பமாகி உள்ளது.. சென்னை மழை என்ற பெயரில் ட்விட்டரிலும் இணையவாசிகள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்..!
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications