தலைநகரில் கொட்டித்தீர்க்கும் கனமழை.. மெரினாவில் தேங்கிய மழை நீர்
சென்னை: தலைநகர் சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக மெரினா கடற்கரை முழுவதும் மழை நீரால் நிரம்பியுள்ளது. இதனால் மெரினா கடற்கரையே கடல் போல் காட்சியளிக்கிறது
தலைநகர் சென்னையின் பல்வேறு இடங்களிலும் நேற்று மாலை முதலே தீவிர கனமழை பெய்து வருகிறது. இரவும் கிண்டி, ஈக்காட்டுதாங்கல், சோழவரம், தாம்பரம், குரோம்பேட்டை, வேளச்சேரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.

கடந்த 12 மணி நேரமாக அங்கு பெய்யும் மழை காரணமாகப் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும், சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் தேங்கியுள்ள மழைநீர் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் சாலையில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே வெள்ள பாதிப்பு தொடர்பாக உதவிகளுக்கு 1913, 04425619206, 04425619207, 04425619208 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில் கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாகச் சென்னை மெரினா கடற்கரை முழுவதும் மழை நீரால் நிரம்பியுள்ளது. இதனால் மெரினா கடற்கரையே கடல் போல் காட்சியளிக்கிறது. கடற்கரைக்கு மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். சென்னையில் மெரினாவிற்கு மட்டுமல்ல. பெசன்ட் நகர், பட்டினம்பாக்கம், நீலாங்கரை என எந்த கடற்கரைக்கும் தற்போதைய சூழலில் செல்லக்கூடாது.












Click it and Unblock the Notifications