Vande Bharat: இனி சென்னை டூ ராமேஸ்வரம் செல்ல 8 மணி நேரம்தான் ஆகும்! ரெடியான வந்தே பாரத்!
சென்னை: சென்னையிலிருந்து ராமேஸ்வரம் இடையே வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் நடந்து முடிந்துள்ள நிலையில் பொங்கலுக்கு முன்பாக இந்த ரயில் இயக்கப்படுவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்த ரயிலால் சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு 8 மணி நேரத்தில் சென்றுவிடலாம்.
வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவின் முக்கிய நகரங்களை வேகமாக இணைத்து, பயணிகளுக்கு விரைவான பயணத்தையும், குறித்த நேரத்தில் சென்று சேரும் வசதியையும் அளிக்கின்றன.

இதனால், இவை பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த ரயில்களின் வரிசையில், தமிழகத்தின் முக்கியமான ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலமான ராமேஸ்வரத்தை சென்னையோடு இணைக்கும் வந்தே பாரத் ரயில் சேவைக்கான கோரிக்கை பல நாட்களாகவே இருந்து வந்தது.
பயணிகளின் எதிர்பார்ப்புகளை ஏற்று, சென்னை - ராமேஸ்வரம் வழித்தடத்தில் வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே வாரியம் கடந்த மாதம் அனுமதி அளித்தது. சமீபத்தில், இந்த புதிய ரயிலின் சோதனை ஓட்டம் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றி பெற்றதால், பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக பிரதமர் நரேந்திர மோடி இந்த வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தெற்கு ரயில்வேயின் தற்காலிக பயண அட்டவணைப்படி, சென்னை எழும்பூரிலிருந்து காலை 5.30 மணிக்கு புறப்படும் ரயில், மதியம் 1.15 மணிக்கு ராமேஸ்வரம் வந்தடையும். மறு மார்க்கமாக, ராமேஸ்வரத்திலிருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
இப்போது, சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வரையிலான 600 கிலோமீட்டர் தூரத்துக்கு, சேது சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 10.25 மணி நேரம் ஆகிறது. வந்தே பாரத் ரயில் சேவை தொடங்குவதால், இந்த பயண நேரம் கணிசமாகக் குறைந்து, வெறும் 8 மணி நேரத்தில் ராமேஸ்வரம் சென்றடைய முடியும். இது பயணிகளுக்கு 2 மணி நேரம் 25 நிமிடங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும் ஒரு பெரிய நன்மையாக அமையும்.
சென்னை - ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஏழு முக்கிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்ட பிறகுதான், பயணக் கட்டண விவரங்கள் மற்றும் ரயிலில் உள்ள பெட்டிகளின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் வெளியிடப்படும்.
தற்போது வந்தே பாரத் ரயில்கள் சென்னை டூ கோவை, சென்னை - நெல்லை, மதுரை -பெங்களூர், நாகர்கோவில் டூ சென்னை எழும்பூர் இடையே இயக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications