தொழிலில் நஷ்டம்.. 6 ஏடிஎம்களை உடைத்த ரியல் எஸ்டேட் அதிபர்.. கடைசியில் என்ன செய்தார் தெரியுமா?
சென்னை: சென்னை அருகே திருநின்றவூரில் இடைத்தரகர் ஒருவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் 6 ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூர், பிரகாஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் சேஷாத்திரி (49). இவர் கடந்த 10 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

ஏடிஎம்மில் கொள்ளை
இந்த நிலையில் இரவு மதுபோதையில் ஏடிஎம்மில் கொள்ளை அடிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக கையில் சுத்தியுடன் திருநின்றவூர் பிரகாஷ் நகர் முதல் திருநின்றவூர் வரை சிடிஎச் சாலையில் உள்ள எஸ்பிஐ, கனரா, ஆக்சிஸ் உள்ளிட்ட 6 ஏடிஎம் எந்திரங்களை உடைக்க முயற்சித்துள்ளார். ஆனால் அவரால் முடியவில்லை.

காவல் நிலையத்தில் சரண்
இதையடுத்து கையில் இருந்த சுத்தியுடன் திருநின்றவூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இவர் திட்டமிட்டு இப்படி செய்தாரா, இல்லை தொழில் நஷ்டத்தால் ஏற்பட்ட விரக்தியாலும் மன உளைச்சலாலும் இப்படி செய்தாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அடுத்தடுத்த முயற்சி
பணம் திருட்டு, நகை திருட்டு ஆகியவற்றை செய்தால் சில காலங்களுக்கு மட்டுமே சொகுசாக வசிக்கலாம் என்பதால் திருடர்கள் அகல கால் வைத்து வருகிறார்கள். இதனால் நீண்ட காலத்திற்கு சொகுசாக வாழ ஆசைப்பட்டு வங்கியையோ அல்லது ஏடிஎம் மையத்தையோ அல்லது நகை அடகு கடை, நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் தங்கள் கைவரிசையை காட்டி வருகிறார்கள்.

நஷ்டம்
அப்படியிருக்கும் போது ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்காக ஏடிஎம் மையங்களை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும் கொள்ளையடிக்க முயன்றவர் அது முடியாத நிலையில் எதற்காக காவல்நிலையத்தில் சரணடைய வேண்டும் என்பது குறித்து போலீஸார் சந்தேகித்து வருகிறார்கள்.
-
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications