பொங்கல் முடிந்து சென்னை திரும்புறீங்களா! குட் நியூஸ் சொன்ன ரயில்வே! டிக்கெட் ரிசர்வ் தேதியை இதுதான்
சென்னை: ஒவ்வொரு பண்டிகை விடுமுறையின்போதும் சென்னையிலிருந்து மக்கள் செல்வதும், மீண்டும் திரும்புவதும் நெரிசல் மிகுந்த பயணமாக மாறிவிடுகிறது. இந்நிலையில் இந்த நெரிசலை குறைக்க, தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்திருக்கிறது. இதற்கான முன்பதிவு தேதியும் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த சிறப்பு ரயில் நாகர்கோவிலிலிருந்து சென்னை தாம்பரம் வரை இயக்கப்படுகிறது. நாளை மறுநாள் (ஜன.18) நாகர்கோவிலிலிருந்து மதியம் 1 மணிக்கு கிளம்புகிறது. மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக இந்த ரயில், மறுநாள் (ஜன.19) அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் வந்து சேர்கிறது. ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

எங்கெங்கு நின்று செல்லும்?
வள்ளியூர், நாங்குநேரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திருச்சி, விருதாசலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட நிறுத்தங்களில் நின்று செல்கிறது. வழக்கமாக இதுபோன்று சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட்டுகள் உடனடியாக விற்று தீர்ந்துவிடும் என்பதால், முன்பதிவை உறுதி செய்ய சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.
எப்படி முன்பதிவு செய்வது?
சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு என்பது, ரேஸுக்கு போவதை போன்றது. எனவே டிக்கெட்டை சீக்கிரம் முன்பதிவு செய்ய சில எளிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். பொதுவாக பயணிகளின் பெயர்களை டைப் செய்வதுதான் அதிக நேரத்தை எடுக்கும். எனவே, இதை தவிர்க்க.. IRCTC தளத்தில், my profile பகுதிக்கு சென்று.. Master List என்பதில் பயணிகளின் பெயர், வயது உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே சேமித்து வைக்க வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, Add passenger என்பதற்கு பதில், ஏற்கெனவே குறிப்பிட்டு வைத்திருந்த பெயரை பயன்படுத்திக்கொள்ளலாம்.
விரைவாக புக் செய்ய
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதாவது, யுபிஐ, கிரெடிட் கார்டு போன்றவற்றில் பணம் செலுத்துவதற்கு பதில், IRCTC-ல் உள்ள e-Walletல் முன்கூட்டியே தேவையான பணத்தை டெபாசிட் செய்து வைத்துக்கொள்ளுங்கள். இது பணம் செலுத்தும் நேரத்தில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கும். குறிப்பாக முன்பதிவு தொடங்குவதற்கு 5-8 நிமிடங்களுக்கு முன்னதாகவே லாகின் செய்ய ரெடியாக இருங்கள்.
அதேபோல பொது வைஃபை இணைப்பை பயன்படுத்துவதை தவிர்க்கவும். இப்படி செய்வதன் மூலம் டிக்கெட் புக்கிங் சீக்கிரமாக முடிந்துவிடும். டிக்கெட்டும் கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications