சென்னையில் கட்டிட விபத்தில் இளம்பெண் பலி..கான்டிராக்டர் ஜாமீன் மனு தள்ளுபடி.. கோர்ட் உத்தரவு
சென்னை: சென்னை அண்ணாசாலையில் பழைய கட்டிட இடிபாடுகள் விழுந்து இளம்பெண் பலியான வழக்கில் கைது செய்யப்பட்ட ஒப்பந்ததாரரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணாசாலை ஆயிரம் விளக்கு மசூதி அருகே உள்ள பழைய கட்டடங்களை இடிக்கும் பணி நடைபெற்று வந்தது. அதன்படி, கடந்த 28-ம் தேதி காலை ஜேசிபி இயந்திரம் மூலம் அண்ணா சாலையில் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த பழைய கட்டடம் ஒன்றை இடிக்கும் பணி நடைபெற்றது. அப்போது, திடீரென ஒரு பகுதி கட்டட சுவர் இடிந்து வெளிப்புறமாக விழுந்தது.

இந்த இடிபாடுகள் அந்த வழியாக சென்றுகொண்டிருந்த இரண்டு பெண்கள் மீது விழுந்தன. இதில் படுகாயம் அடைந்த அவர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில் பத்மபிரியா (22) என்பவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மதுரையை சேர்ந்த பத்மபிரியா, சென்னையில் தங்கி ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆயிரம் விளக்கு போலீஸார், ஒப்பந்ததாரர் அப்துல்ரஹ்மான் உள்ளிட்டோரை கடந்த 29-ம் தேதி கைது செய்தனர். கட்டிட உரிமையாளர் தலைமறைவாக உள்ளார். இதனிடையே, ஒப்பந்ததாரர் அப்துல் ரஹ்மான், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவானது, நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டிடத்தை இடிக்கும் முன்பு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும், சம்பவம் நடந்த போது அவர் அங்கு இல்லை என்றும் அப்துல் ரஹ்மான் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யாமல் கட்டிடம் இடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், வழக்கு தொடர்பாக புலன் விசாரணை நடந்து வருவதால் ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் காவல் துறை சார்பில் ஆஜரான சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இளம்பெண் உயிரிழந்திருப்பதை கருத்தில் கொண்டும், விசாரணை இன்னும் நிலுவையில் இருப்பதாலும், கைது செய்யப்பட்டு குறுகிய காலமே ஆகியுள்ளதாலும் ஒப்பந்ததாரர் அப்துல் ரஹ்மானுக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி, அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்!












Click it and Unblock the Notifications