தங்கை முறை 10-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்- தம்பி பாப்பா தந்துவிட்டு கம்பி நீட்டிய அண்ணன் - போலீஸ் வலை!
சென்னை: 10-ம் வகுப்பு படித்து வந்த தங்கை முறை மாணவியுடன் தகாத உறவில் ஈடுபட்டு குழந்தை பெற காரணமாக இருந்த அண்ணனை சென்னை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- சென்னை அம்பத்தூர் அருகே டியூசன் ஆசிரியையுடனான கள்ளக் காதல் விவகாரத்தில் 12-ம் வகுப்பு படித்து முடித்த மாணவன் தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
- கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பேருந்து நிறுத்தம் ஒன்றில் பள்ளிக் கூட மாணவிக்கு தாலி கட்டிய பாலிடெக்னிக் மாணவன் கைது செய்யப்பட்டார். வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபரும் கைது செய்யப்பட்டார்.. இப்படியான செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இப்போது இந்த சம்பவங்களை மிஞ்சும் வகையில் சென்னை திருவொற்றியூர் பகுதியில் ஒரு நிகழ்வு அரங்கேறி உள்ளது.

10-ம் வகுப்பு மாணவி
சென்னை திருவொற்றியூர் ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்தர் ஐயப்பன். இவரது மகள், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிக் கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத காத்திருந்த அந்த மாணவி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

வயிற்று வலியும் கர்ப்பமும்
இதனையடுத்து மகளின் வயிறு பெரிதாக இருக்கிறது; வயிறும் வலி அதிகமாக இருக்கிறது என பதறிப் போய் சென்னை மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அந்த மாணவியை சேர்த்திருக்கின்றனர். அந்த மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
அப்பெண்ணின் பெற்றோரிடம், உங்கள் மகள் 10 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்; இப்போது அவருக்கு ஏற்பட்டிருப்பது வயிற்று வலி அல்ல.. பிரசவ வலிதான் என மருத்துவர்கள் விவரித்தனர். இதனால் மாணவியின் பெற்றோர் என்ன செய்வது என தெரியாமல் விக்கித்துப் போயினர்.

கர்ப்பமாக்கிய காமுகன் அண்ணன்
இது தொடர்பாக திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கும் மருத்துவர்கள் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாணவிக்கு பிரசவ சிகிச்சை மேற்கொண்டனர். இதில் 10-ம் வகுப்பு மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதன்பின்னர் மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் தொடக்கத்திலேயே நடந்த உண்மைகளை அப்படியே சொல்லிவிட்டார் அந்த 10-ம் வகுப்பு மாணவி. அதாவது சித்தி மகனாகிய 19 வயது முகேஷ் என்பவர்தான் 10 மாதங்களுக்கு முன்னர் தங்கை என்றும் கருதாமல் காமவெறியில் மாணவியை உடலுறவுக்கு கட்டாயப்படுத்தி இருக்கிறார். வேறுவழியே இல்லாமல் முகேஷுன் மிரட்டலுக்கு தாம் உடன்பட்டதாகவும் 10-ம் வகுப்பு மாணவி வாக்குமூலம் கொடுத்தார். இது போலீசாருக்கும் பெற்றோருக்கும் பேரிடியாகிப் போனது.

தம்பி பாப்பா தந்த அண்ணனுக்கு வலைவீச்சு
அதாவது முகேஷ், தனது பெரியம்மா மகளான தங்கையுடன் கட்டாய உடலுறவை வைத்து குழந்தை பிறக்க காரணமாகவும் இருந்திருக்கிறார். இந்த தகவல் தெரிந்த உடனேயே முகேஷ் தப்பி ஓடி தலைமறைகிவிட்டார். தற்போது திருவொற்றியூர் போலீசார் தப்பி ஓடிய முகேஷை வலைவீசித் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வடசென்னை பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
26 வயது கொத்தனாருக்கு திருச்சியில் விழுந்த மரண அடி! காமுகர்களுக்கு நீதிபதி ஜெயந்தி தந்த சரியான பாடம் -
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications