சென்னை தாம்பரம் டூ பீச்.. ரயில் பயணிகளுக்கு இலவச பஸ்.. மாற்றி யோசித்த தெற்கு ரயில்வே! பலன் கொடுக்குமா?
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலைய பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவை குறைக்கப்பட்டதால் தாம்பரம் - கடற்கரை இடையே காலை மற்றும் மாலையில் நெரிசல் மிக்க நேரத்தில் கட்டணமில்லா பேருந்துகளை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. நாளை மறுநாள் முதல் இந்த பேருந்து சேவை இயக்கப்பட உள்ளது. 7 நிமிட இடைவெளியில் மொத்தம் 20 சேவைகளாக இயக்கப்படுகின்றன.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வரும் பிளாட்பாரம் நம்பர் 10 மற்றும் 11 ல் பிரமாண்ட தூண்கள் எழுப்பப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெறுகிறது.

மின்சார ரயில்கள் ரத்து
இதனால், புறநகர் மின்சார ரயில்களை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கபப்ட்டு வந்த 5 மற்றும் 6 நடைமேடைகளில் இருந்து தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது. இதனால், ரயில் ஏற்பட்டுள்ள வழித்தட நெருக்கடியால் ரயில் சேவையையும் குறைத்துள்ளது.. மின்சார ரயில்கள் குறைப்பால் சென்னையில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் இந்த புறநகர் மின்சார ரயில் சேவையில் ஏற்பட்ட குளறுபடிக்கு தெற்கு ரயில்வே முறையாக திட்டமிடாததே காரணம் என்று அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்தன. ஒருநாளும் திட்டமிட்ட நேரத்திற்கு அலுவலகங்களுக்கு செல்ல முடிவது இல்லை என்று ரயில் பயணிகளும் குமுறலை வெளிப்படுத்தினர்.
இலவசமாக பயணிக்கலாம்
இதையடுத்து, பயணிகளின் சிரமத்தை குறைக்க மாற்று வழிகளை தெற்கு ரயில்வே கையில் எடுத்துள்ளது. இதன்படி, ரயில் பயணிகள் இலவசமாக பயணிக்கும் வகையில் சென்னை எம்.டி.சி பேருந்துகளை இயக்க தெற்கு ரயில்வே முடிவு எடுத்துள்ளது. இதன்படி, வரும் 28 ஆம் தேதி முதல் காலை 6. 40 மணி முதல் 9.40 மணி வரை 7 நிமிட இடைவெளியில் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த பேருந்துகள் தாம்பரம் சானடோரியம், குரோம்பேட்டை, பல்லாவரம், திரிசூலம், கிண்டி, எழிலகம், தலைமை செயலகம் பாரிமுனை ஆகிய இடங்களில் நின்று செல்லும். இந்த பேருந்துகளில் ரயில் டிக்கெட் அல்லது சீசன் பாஸ் வைத்து இருக்கும் பயணிகள் கட்டணம் எதுவும் செலுத்தாமல் இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த வழியாக இயக்கப்படும்?
காலை 6.30, 6.37, 6.44, 7.05, 7.12, 7.26, 7.33, 7.40,7.54, 8.01, 8.15,8.22, 8.29, 8.43 ஆகிய நேரங்களில் சிறப்பு பேருந்துகள் அண்ணா சாலை, சேப்பாக்கம், தலைமை செயலகம் வழியாக செல்லும்.
6.51, 7.19. 7.47,8.08,8.36, ஆகிய நேரங்களில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் கிண்டி, தி.நகர், எழும்பூர், சென்ட்ரல், பாரிஸ் வழியாக இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
கூடுதல் மின்சார ரயில்கள்
மறுமார்க்கத்தில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிடத்திற்கு ஒருமுறை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மொத்தம் 20 டிரிப்புகள் இயக்கப்படுகின்றன. அதுபோக, தாம்பரம் - சென்னை பீச் இடையே இயக்கப்படும் 5 மின்சார ரயில்களில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைத்து 15 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் கூட்ட நெரிசல் நேரத்தில் இயக்கப்பட உள்ளது.
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மாலை 5.15, 5.30, 6.10, 7.10, 8 மணி ஆகிய நேரங்களிலும் தாம்பரம் - கடற்கரை இடையே காலை 6.40, 7.10, 8.10, 8.55, 9.15 ஆகிய நேரங்களில் கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.
மாற்றி யோசித்த ரயில்வே
ரயில் பயணிகளின் நெருக்கடியை குறைக்கும் விதமாக தெற்கு ரயில்வே மாற்றி யோசித்து இந்த திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. எனினும், இது எந்த அளவு கை கொடுக்கும் என்று இயக்கப்பட்ட பிறகே தெரியும் என பயணிகள் கூறியுள்ள்னர்.
ஏனெனில், பேருந்துகளில் கடுமையான டிராபிக் ஜாம் இருக்கும் என்பதால்தான் ரயில்களில் செல்வோம். எனவே, பேருந்து சேவையை விட முடிந்த அளவு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications