Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எச்.ராஜா குற்றவாளி.. 1 ஆண்டு சிறை.. பெரியார் சிலை, கனிமொழி வழக்குகளில் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரியார் சிலை உடைப்பு குறித்து கருத்து தெரிவித்த வழக்கிலும், கனிமொழி பற்றி அவதூறாகப் பேசியது குறித்த வழக்கிலும் எச்.ராஜா குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. எச்.ராஜாவுக்கு இரு வழக்குகளிலும் தலா 6 மாதம் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து எம்.பி எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாஜக தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெரியார் சிலையை உடைப்பேன் என்று ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவு செய்தது தொடர்பாகவும், திமுக எம்.பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியதாகவும் பல்வேறு காவல் நிலையங்களில் திமுக, காங்கிரஸ், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த புகார்களில் ஈரோடு நகர் காவல் துறை, கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் எச்.ராஜாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

h raja bjp court

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி எச். ராஜா தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் மூன்று மாதங்களில் இரண்டு வழக்கின் விசாரணையையும் முடிக்க சென்னை எம்.பி., எம்.எல்.ஏ. மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயவேல் முன்பு நடைபெற்றது. பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என கூறியதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்படவில்லை எனவும், திமுக எம்.பி. கனிமொழி மீதான கருத்து அரசியல் ரீதியான கருத்து என்றும், அதிலும் அவர் புகார் அளிக்காத நிலையில், மூன்றாம் நபர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு வழக்கின் தீர்ப்பை தள்ளி வைத்த நீதிபதி ஜெயவேல் இன்று இந்த இரண்டு வழக்குகளிலும் தீர்ப்பு அளித்துள்ளார். காவல்துறை தரப்பில் எச்.ராஜா குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. இரு பதிவுகளும் எச்.ராஜா அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் இருந்து வெளியிடப்பட்டது என்பதை இந்த நீதிமன்றம் தீர்மானிக்கிறது. எனவே எச்.ராஜா குற்றவாளி என சென்னை எம்.பி, எம்.எல்.ஏ மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் தீர்ப்பு அளித்துள்ளார்.

மேலும், இந்த இரண்டு வழக்குகளிலும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு தனித்தனியாக 6 மாத காலம் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இரு வழக்குகளிலும் தலா ரூ. 10,000 அபராதம் விதித்தும் எச்.ராஜாவுக்கு உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+