பிரபல ஓட்டலில் அழகியுடன் சேர்ந்து ரூம் போட்ட தொழிலதிபர்.. என்னாது 10 சவரன் தங்க நகையா? பரபர சென்னை
சென்னை: திருமண மோசடிகள் நாளுக்கு நாள் பெருகி கொண்டிருக்கின்றன.. இதற்கு ஆண், பெண் இரு தரப்புமே விலக்கில்லை.. மற்றொருபக்கம் ஆன்லைன் மோசடிகளும் பெருகிவருகின்றன.. புதுபுது செயலிகளை பயன்படுத்தி, புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.. இதற்கு நடுவில் தொழிலதிபர்களை ஏமாற்றி பணம் நகை பறிக்கும் செயல்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.. இதனால் உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு, ஏமாந்து போகும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே உள்ளது.. சென்னையில் என்ன நடந்தது?
சென்னையை சேர்ந்த 3 மாணவர்கள் கடந்த மாதம் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றார்கள்.. பிரபல பொறியியல் கல்லூரியில் படிக்கும் தினேஷ்குமார், அப்சர் அலி, வசந்தகுமார் ஆகிய 3 மாணவர்களும் புதுச்சேரியில் அழகிகளுடன் உல்லாசமாக இருக்கவும் விரும்பினார்கள.

இதற்காக ஒரு ஆன்லைன் ஆப் மூலம், ரூ.1.50 லட்சம் லட்சம் பணம் அனுப்பி 4 விபச்சார அழகிகளை அனுப்புமாறு புக்கிங் செய்திருக்கிறார்கள்.
அழகிகளுடன் உல்லாசம்
ஆனால் இது சம்பந்தமான புரோக்கரோ, அந்த பணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு, அழகிகளை அனுப்பி வைக்கவில்லையாம்.. அந்த புரோக்கர் சென்னை எழும்பூரில் இருப்பதாக தெரிகிறது.. நீண்ட நேரம் அழகிகள் பற்றின தகவல் இல்லாததால், அழகிகள் எங்கே? என்று இளைஞர்கள் கேட்டுள்ளனர்.. பிறகு அழகிகள் இல்லாவிட்டால் பணத்தை திருப்பி தந்துவிடுமாறும் கேட்டுள்ளனர்..
ஆனால், பணத்தை புரோக்கர் தராததால், சென்னைக்கே வந்து அந்த புரோக்கரிடம் தகராறில் ஈடுபட்டார்கள்.. ஒருகட்டத்தில் கோபமடைந்த இளைஞர்கள் 3 பேரும், புரோக்கரை கடுமையாக தாக்கி, காரில் கடத்தி சென்றுள்ளனர்..
உல்லாசமாக இருக்க நினைத்து
இந்த தகவல் போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு தெரியவந்ததையடுத்து, தனிப்படை போலீசார் இது தொடர்பான விசாரணையை கையிலெடுத்து, நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு புரோக்கரை மீட்டனர்.. புரோக்கரை அடித்து தாக்கி கடத்திய 3 இளைஞர்களையும் கைது செய்திருந்தனர்.. அழகிகளுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று நினைத்த 3 பேருமே, புழலில் கம்பி எண்ணும் நிலைமை வந்தது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், சென்னையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. சென்னை அடுத்த ஆவடி பகுதியை சேர்ந்தவர் மணி.. தொழிலதிபரான இவருக்கு 47 வயதாகிறது.. வாரத்தில் 2 நாட்கள், அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் உள்ள பாரில் மது அருந்துவது இவருக்கு வழக்கமாம்..
104 ரூம் நம்பர்
அப்படித்தான், கடந்த 27ம் தேதியும், அதே ஸ்டார் ஓட்டலில் உள்ள மதுபாரில் மது அருந்தியிருக்கிறார். அப்போது ஏற்கனவே அறிமுகமான தீபிகா என்ற பெண், அந்த பாருக்கு வந்திருக்கிறார்.. மணியை பார்த்ததுமே அவருடன் பேசியிருக்கிறார்.. பிறகு 2 பேருமே சேர்ந்து பாரில் மது அருந்தியுள்ளனர்.
பிறகு இருவரும் அதே ஓட்டலில் 104 என்ற ரூமில் அன்றைய தினம் இரவு தங்கி, உல்லாசமாகவும் இருந்துள்ளனர்.. அளவுக்கு அதிகமான மதுபோதை காரணமாக, தொழிலதிபர் மணி மறுநாள் காலை 10 மணி வரை தூங்கி கொண்டேயிருந்தாராம்.. 10 மணிக்கு மேல் எழுந்து பார்த்தபோது அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் தங்க செயின் காணாமல் போயிருந்தது.. தன்னுடன் தங்கியிருந்த தீபிகாவையும் ரூமில் காணவில்லை..
தீபிகா எங்கே
இதனால் அதிர்ச்சியடைந்த மணி, உடனே தீபிகாவுக்கு போன் செய்தார்.. ஆனால் தீபிகாவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது... இதனால் குழம்பி நின்ற மணி, தேனாம்பேட்டை போலீசில் இதுகுறித்து புகார் தந்தார்..
இந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட ஸ்டார் ஓட்டலில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை வைத்து, தீபிகா எங்கே என்று தேடி வருகிறார்கள்.. அவரை பிடித்தால்தான், 10 சவரன் நகையும் தெரியவருமாம்..!!
-
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு












Click it and Unblock the Notifications