Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்து இருக்கலாம்! புறநகர் ஏசி மின்சார ரயில் சேவை: பயணிகள் ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புறநகர் ஏசி மின்சார ரயில் சேவை நேற்று முன்தினம் முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவை இயக்கப்படும் நேரம் அனைத்து தரப்பு பயணிகளுக்கும் உகந்ததாக இல்லை எனவும் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் பயணிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் சேவை பயணிகளின் போக்குவரத்து தேவையை தீர்த்து வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரையில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் சென்னை மக்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. சென்னை புறநகரில் இருந்து நகருக்குள் போக்குவரத்து நெரிசல் இன்றி வந்து செல்ல புறநகர் மின்சார ரயிலே பிரதானமாக உள்ளது.

AC electric train Southern Railway Chennai

ஏசி மின்சார ரயில் சேவை

இதனால், சென்னை மின்சார ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். இந்த ரூட்டில் ஏசி மின்சார ரயில் இயக்கப்பட வேண்டும் என்பது பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இதனை ஏற்று பயணிகள் வசதிக்காக ஏ.சி மின்சார ரயில் சேவை விரைவில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்து இருந்தது. அதன்படி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே நேற்று முன்தினம் முதல் ஏ.சி. மின்சார ரயில் சேவை தொடங்கியது.

ஆனால், இந்த மின்சார ரயில் சேவைக்கட்டணம் மிக மிக அதிகமாக இருப்பது பயணிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. குறைந்தபட்ச கட்டணமே ரூ.35 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இது மெட்ரோ ரயில் கட்டணத்தை விட அதிகம் என பயணிகள் கூறுகிறார்கள். எனவே, அனைத்து தரப்பு மக்கள் பயன்படுத்தும் வகையில் கட்டணத்தை மாற்ற வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.. மேலும், ரயிலின் நேர அட்டவணையில் சற்று மாற்றம் கொண்டு வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இயக்கப்படும் நேரம் சரியில்லை

தற்போது இந்த ரயில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு 8.35 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையம் செல்கிறது. மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு 10.40 மணியளவில் கடற்கரை ரயில் நிலையம் வந்தடையும். பின்னர் கடற்கரையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு 5.25 மணிக்கு செங்கல்பட்டு சென்றடைகிறது.

வெயில் அதிகமாக இருக்கும் நண்பகல் இந்த ரயிலை இயக்கினால் பயணிகள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொஞ்சம் நிம்மதியாக பயணிக்க ஏதுவாக இருக்கும். ஆனால், தற்போது உள்ள டைமிங் படி மாலையும் காலை நேரத்திலும் இயக்கப்படுகிறது. அலுவலகம் செல்வோர் வசதிப்படியும் தற்போது இயக்கப்படும் ரயில் சேவையின் நேரம் இல்லை என்பது பயணிகள் முன்வைக்கும் மற்றொரு முக்கிய பிரச்சினையாக உள்ளது.

பயணிகள் அதிருப்தி

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து 9 மணிக்கு கிளம்பும் ரயில் தாம்பரத்திற்கு 9.41 மணிக்கும் கிண்டிக்கு 10 மணிக்கும் வந்து சேருகிறது. பார்க் ரயில் நிலையத்திற்கு 10.19 மணிக்கும் பீச் ரயில் நிலையத்திற்கு 10.30 க்கும் சென்றடைகிறது. இதனால் அலுவலகம் செல்வோர் இந்த ரயிலில் பயணிப்பது சாத்தியமற்றது எனவும் பயணிகள் ஆதங்கம் தெரிவித்து உள்ளனர்.

கட்டணம் அதிகம், பயணிகளுக்கு தேவையான சரியான நேரத்தில் ரயில் இயக்கப்படவில்லை என தங்கள் அதிருப்தியை சென்னை புறநகர் மின்சார ரயில் பயணிகள் முன்வைத்து இருக்கிறார்கள். இப்படி சரியான திட்டமிடல் இன்றி இந்த ரயிலை இயக்குவதற்கு இயக்காமலே இருக்கலாம் எனவும் பயணிகள் ஆதங்கத்துடன் கூறியதை பார்க்க முடிகிறது.

கருத்துக்களை தெரிவிக்கலாம்

இதற்கிடையே, ஏ.சி. ரயில் நேர அட்டவணை குறித்து பயணிகள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஏ.சி மின்சார ரயில் நேர அட்டவணை குறித்து ரயில் பயணிகள் தங்கள் கருத்துகளை 6374713251 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பலாம். தெற்கு ரயில்வேயின் ரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்து சிறப்பான ரயில் சேவை வழங்க உதவ வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+