சென்னை புறநகர் பீரோவில் தங்க நகைகள்.. திருவான்மியூர் எஸ்பிஐ பேங்க் ஏடிஎம் மிஷினில் அதென்ன கருப்பா?
சென்னை: சென்னையின் புறநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் கொள்ளை சம்பவங்கள் பெருகி கொண்டிருக்கின்றன.. ஆட்டோவில் தனியாக வருபவர்களை குறிவைத்தும் பெரும்பாலான சம்பவம் நடப்பதாக செய்திகள் வந்த நிலையில், பட்டப்பகலில் வீடுகளுக்குள் புகுந்தும் கொள்ளைகள் நடந்து வருவது பொதுமக்களை கதிகலங்க செய்து வருகிறது. இதையடுத்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவோரை கண்டறிந்து, அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை சென்னை காவல்துறையினர் தீவிரப்படுத்தி வருகிறார்கள்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுந்தர் என்பவரின் சைதாப்பேட்டை நகைக்கடையில் ரோஹித் என்ற 30 வயது இளைஞர் 6 மாதமாக வேலை பார்த்து வருகிறார்.. இவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் அதிகமாக இவரை சுந்தர் நம்பினார். ஆனால், ரோஹித், கடையிலிருந்து 60 சவரன் நகை திருடி கொண்டு போனார்.

வடமாநில கொள்ளையர்
அதேபோல, கொட்டிவாக்கத்தில் மகேஷ்குமார் என்பவர் வீட்டில் நேபாளத்தை சேர்ந்த ரமேஷ் குடும்பத்தினர், அங்கேயே தங்கி வீட்டு வேலை செய்ய வந்தனர்.. மகேஷ்குமார் வெளியூர் சென்ற நேரத்தில் இந்த நேபாள குடும்பம், பீரோவை உடைத்து 60 சவரன் நகையை திருடி போனது.
இப்படி சில நாட்களுக்கு முன்பு, அண்ணா நகர், கொட்டிவாக்கம், சைதாப்பேட்டை, திருப்போரூர் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்களில், ஒரே வாரத்தில் நாளிலேயே 216 சவரன் நகை, 4 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது பெரும் பரபரப்பை தந்திருந்தது. இப்போது மீண்டும் கொள்ளை சம்பவம் கதிகலங்கவிட்டுள்ளது. என்ன நடந்தது?
ஏடிஎம் எஸ்பிஐ கஸ்டமர்கள்
திருவான்மியூர் திருவள்ளுவர் நகரில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்தில், கஸ்டமர்கள் பணம் எடுக்க சென்றால், மிஷினில் இருந்து பணம் வரவில்லை. ஆனால், பணம் எடுக்கப்பட்டதாக sms மெசேஜ் மட்டும் வந்துள்ளது. உடனே வாடிக்கையாளர்கள் வங்கி நிர்வாகத்தில் புகார் தந்தனர்.. இதனால் வங்கி மேலாளர் நரேன்குமார், ஏடிஎம் மிஷினை சோதனை செய்தபோது, பணம் வெளியே வரும் இடத்தில் கருப்பு நிற அட்டையை வைத்து வெளியே பணம் வராமல் தடுத்து வைத்திருந்தது தெரியவந்தது.
பிறகு சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது 2 மர்ம நபர்கள், கள்ளச்சாவி மூலம் ஏடிஎம் மிஷினை திறந்து, பணம் வரும் இடத்தில் கருப்பு நிற அட்டையை வைத்தது தெரியவந்தது.. அதுமட்டுமல்ல, கஸ்டமர்கள் மிஷினில் பணம் எடுக்கும்போது, பணம் வராமல் திரும்பி சென்றதுமே, சிறிது நேரத்தில் மர்ம நபர்கள் வந்து, அந்த கருப்பு அட்டையில் சிக்கிய கஸ்டமர்களின் பணத்தை எடுத்து செல்வதும் பதிவாகியிருந்தது.
3 பேருமே சிக்கினார்கள்
இதுகுறித்து நரேன்குமார் திருவான்மியூர் போலீசில் புகார் தந்ததையடுத்து, போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான், உத்தரபிரதேசத்தை சேர்ந்த குல்தீப் சிங் (26), பிரிட்ஜ் பான் (30), சுமித் யாதவ் (33) ஆகிய 3 பேர் இந்த கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்தது. பிறகு தனிப்படை போலீசார், அந்த 3 பேரையும் கைது செய்துள்ளனர்..
அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோதுதான், கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டது அம்பலமானது.. இப்போது 3 பேருமே ஜெயிலில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications