மின்சார ரயில்கள் ஓடல.. பஸ்ஸில் கூட்டம்.. ஆட்டோ அதுக்கு மேல.. சென்னை புறநகரில் பரபரப்பு.. என்னாச்சு?
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் ரயில்கள் விடப்படும் என்று பார்த்தால், இருக்கிற ரயில்களை கேன்சல் செய்தால் எப்படி? என்று சென்னைவாசிகள் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.. விடுமுறை நாளான இன்று சென்னையில் என்ன நடந்தது?
வரும் 31-ந்தேதி தீபாவளி வரவுள்ளதால், அதற்கான புத்தாடைகளை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.. அந்தவகையில், இன்று விடுமுறை நாள் என்பதால், பலரும் ஷாப்பிங் செய்தார்கள்..

கடைவீதிகள்: இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் கடை வீதிகளில் கூட்டம் அலைமோதியது... சென்னையின் பிரதான இடங்களில் மக்கள் நெரிசல் ஏற்பட்டது.. குறிப்பாக தி.நகர் பகுதி அனைவருக்குமே பொதுவான இடம் என்பதால், புறநகர் பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் தி.நகருக்கு வந்திருந்தனர்.
வழக்கமாக தி.நகர் வருவதாக இருந்தால், மின்சார ரெயிலில் மாம்பலம் ரெயில்வே ஸ்டேஷனில் இறங்கி தி.நகர் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, பாண்டிபஜார் உள்ளிட்ட பகுதிகளில் ஷாப்பிங் செய்வார்கள்.. அதேபோல, குரோம்பேட்டை ரெயில்வே ஸ்டேஷனிலும், வண்ணாரப்பேட்டையில் ஷாப்பிங் செய்வார்கள்.. சிலர் பீச் ஸ்டேஷன் வரையும் மின்சார ரயிலில் செல்வார்கள்..
திடீர் அறிவிப்பு: ஆனால், இனறைய தினம் கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு வழித்தடத்தில் திடீரென மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.. அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணிவரை, வழக்கமாக இயக்கப்படும் 60 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதுடன், அதற்கான அறிவிப்பையும் சென்னை ரெயில்வே கோட்டம் திடீரென வெளியிட்டது..
இதற்கு மாற்றாக, 20 நிமிட இடைவெளியில் இரு மார்க்கத்திலும், 35 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்றும் சென்னை கடற்கரை-திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி தடத்திலும், ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனினும், திடீரென 60 மின்சார ரெயில்களை ரத்து செய்தது பயணிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்திவிட்டது.
அதிக நெரிசல்: இதனால், தி.நகர், வண்ணாரப்பேட்டை பகுதிகளில் பொதுமக்கள் கடும் நெரிசலுக்கு ஆளானார்கள்.. 20 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்பட்ட சிறப்பு மின்சார ரெயில்களிலும் கூட்டம் அலைமோதியது. எனவே, மாநகர பஸ்களை நாடி சென்றனர்.. ஆனால், பஸ்களிலும் உள்ளே ஏற முடியாத அளவுக்கு நெரிசல் அதிகமாக இருந்தது..
எனவே ஆட்டோக்களில் செல்ல முயன்றால், ஆட்டோக்காரர்கள் கேட்கும் கட்டணத்தை கண்டு பொதுமக்கள் அதிர்ந்துபோய்விட்டனர்.. எனினும், மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் ஆட்டோக்களில் அதிக கட்டணம் செலுத்தும் நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார்கள்..
பராமரிப்பு பணிகள்: மொத்தத்தில் இன்று ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டு, ஷாப்பிங் மால்கள், துணிகடைகள் என பல்வேறு இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. இதுகுறித்து அலைச்சலுக்கு உள்ளான பொதுமக்கள் கூறும்போது, "பராமரிப்பு பணிகளை முன்கூட்டியே ரயில்வே நிர்வாகம் செய்திருக்கலாம், அல்லது பண்டிகை முடிந்தபிறகாவது செய்திருக்கலாம்.. கூடுதல் மின்சார ரெயில்களை விடுவார்கள் என்றால், இருக்கிற ரயில்களையும் கேன்சல் செய்துவிட்டார்களே" என்று நொந்து கொண்டார்கள்..!!
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications