தாம்பரத்தில் யார் பாருங்க? திடீர்னு ஒரே இடத்தில் மாறி மாறி அதிரடி.. திமுக, அதிமுகவால் விழித்த சென்னை
சென்னை: சென்னை தாம்பரத்தில் அதிமுக, திமுக தரப்பினரிடையே திடீர் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.. இந்த சலசலப்பினால், பரபரப்பும் தொற்றி கொண்டுள்ளது. என்ன காரணம்?
நடந்து முடிந்துள்ள தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது.. ஆனால், அதிமுகவோ அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது.. அதிமுகவின் தோல்விக்கு சில காரணங்களை அடுக்கியிருக்கிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

குறிப்பாக, "கடந்த 2019ம் ஆண்டு தேர்தலைவிட, 2024-ம் ஆண்டு தேர்தலில் 1% வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளோம்... இது அதிமுகவிற்கு கிடைத்த வெற்றியாகும்.. ஆனால், 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக தனியாக 33.52% வாக்குகள் பெற்றிருந்தநிலையில், இப்போது 2024 தேர்தலில் வெறும் 26.93% வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. அதாவது 6.51% வாக்குகள் குறைந்துள்ளது.
2019 தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வாக்கு சதவிகிதம் 53.29 சதவீதமாகும்.. 2024 தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி பெற்ற வாக்கு சதவிகிதம் 46.97 சதவீதமாகும்.. எப்படி பார்த்தாலும், கடந்த தேர்தலை விட 6.32% வாக்குகள் திமுகவுக்கு குறைந்துள்ளது. அப்படியானால், தமிழகத்தில் அதிமுக வாக்கு சதவிகிதம் மட்டும்தான் அதிகரித்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி காரணம் தெரிவித்திருக்கிறார்.

டெபாசிட்: அதாவது, தென்சென்னை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், புதுச்சேரி ஆகிய 7 தொகுதிகளில் அதிமுக டெபாசிட்டையே பறிகொடுத்திருக்கும் நிலையில், அதிமுகவின் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது என்று எடப்பாடி கூறியிருக்கிறார். இதைத்தான் அதிமுகவினர் கொண்டாடி வருகிறார்கள்.. போஸ்டர் அடித்து ஒட்டி, வாக்காளர்களுக்கும் நன்றியை தெரிவித்து வருகிறார்கள்.

அந்தவகையில், தாம்பரத்திலும் அதிமுகவின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.. இதை பார்த்ததுமே திமுக தரப்பிலும், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர்கள் தாம்பரத்தில் ஒட்டப்பட்டு வருகின்றன.
தாம்பரம்: தாம்பரத்தில் வெற்றி பெற்ற திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டர்களில், "4,87,029 வாக்குகள் வித்தியாசத்தில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி" என்று அச்சிடப்பட்டுள்ளது.
அதிமுக தரப்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், "இரட்டை இலைக்கு வாக்களித்த வாக்காளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்,.. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்... 2026ம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் மக்கள் போற்றும் நல்லாட்சி அமைய அயராது உழைப்போம்" என்று அச்சிடப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் அதிமுகவும், திமுகவும் நன்றி தெரிவித்து போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை கிளப்பி விட்டுள்ளார்கள்.
ரத்தத்தின் ரத்தங்கள்: "இந்த தேர்தலில், ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுள்ளதால், எல்லா நேரங்களிலும் சத்தியமே ஜெயிக்கும் என்பதை வரும் காலங்கள் அதிமுக உணர்த்தும்" என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
"ஆட்சி பொறுப்பேற்று இந்த 3 வருடமும் மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.. இந்த மக்கள் நலத்திட்டங்களால்தான் அதிமுக மகத்தான வெற்றியை பெற்றுள்ளது" என்கிறார்கள் உடன்பிறப்புகள். இப்படி ரத்தத்தின் ரத்தங்களும், உடன்பிறப்புகளும், மாறி மாறி காரணம் சொல்லி போஸ்டர்களை ஒட்டிவருவதால் தாம்பரத்தில் ஒருவித பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
-
'கணவனுக்கு பதில்' தாம்பரம் தனியார் பள்ளி ஆசிரியையின் நட்பு.. புழல் சிறையில் மேடவாக்கம் இளைஞர் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications