சென்னைக்கு பேட் நியூஸ்.. நாளை முதல் வெப்பம் தகிக்கும்.. அடுத்த சில நாட்களுக்கு இதே நிலை.. வெதர்மேன்
சென்னை: சென்னையில் நாளை முதல் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸிலிருந்து 38 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை ஜூன் 3ஆம் தேதி தொடங்கியது. இதனால் தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் வடமாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடுமையாக அவதிப்படுகிறார்கள்.

ட்விட்டர்
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் சென்னையில் நாளையிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை 36 டிகிரியிலிருந்து 38 டிகிரிக்கு செல்லும். நாளை தென் கேரளா, கன்னியாகுமரியில் மிதமான மழை பெய்யும்.

வெப்பச்சலன மழை
ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் வெப்பச்சலன மழை குறைவாகவே இருக்கும். சென்னை, வட தமிழகத்தின் வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளிலும் அனல் காற்று வீசும். வரும் 11 அல்லது 12 ஆம் தேதி முதல் மேற்கு கடலோர பகுதிகளில் பருவமழை வேகமெடுக்கும்.

புதிய காற்றழுத்தம்
வடக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகும். இந்த காற்றழுத்தம் உருவாகிவிட்டால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மேற்கு கடலோர பகுதிகளிலும் மழை அதிகரிக்கும். உள்மாவட்டங்களிலும் தமிழக கடலோர மாவட்டங்களிலமும் வெப்பச்சலனத்தால் பெய்யும் மழை குறைவாகவோ இல்லை பெய்யாமலோ இருக்கும் என தெரிவித்தார்.

கொளுத்தும் வெயில்
தற்போது பெரும்பாலான இடங்களில் வெயில் கொளுத்துகிறது. இதனால் மக்கள் அதிக வெப்பத்தால் அவதியடைந்து வருகிறார்கள். எந்த நேரமும் ஏசியை உபயோகப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை மக்கள் மழையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications