திருநெல்வேலி வந்தே பாரத்.. வைகோ நச்சுனு போட்ட நங்கூரம்..சென்னை + நெல்லை வந்தே பாரத் இங்கேயுமா? செம்ம
சென்னை: வந்தே பாரத் ரயில் சேவை, தென்மாவட்ட மக்களுக்கு விரைவில் வரும் என்று நம்பப்படுகிறது. இதுகுறித்து முக்கிய கோரிக்கை ஒன்றும் வலுத்து வருகிறது.
வந்தே பாரத் ரயிலில் பல நவீன வசதிகள் உள்ளதால், மக்களால் ஈர்க்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலில், என்ஜின், ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்..

இந்த வந்தே பாரத் திட்டம் பிரதமர் மோடியின் கனவுத்திட்டம் என்கிறார்கள்.. அதனால்தான், ஒவ்வொரு வந்தே பாரத் ரயில் சேவையையும் நேரடியாகவே சென்று பிரதமர் துவக்கி வைத்து வருகிறார்.
வந்தே பாரத்: நம்முடைய தமிழ்நாட்டில்கூட, 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.. சென்னை - மைசூரு & சென்னை - கோவை ஆகிய வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயங்குகின்றன. இதில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில், பெரிதும் எதிர்நோக்கி இருப்பது, தென்மாவட்டத்துக்கு வரப்போகும் வந்தே பாரத் ரயில்தான். நாளைய தினம் இந்த சென்னை - நெல்லை ரயில் சேவையை துவங்க உள்ளது.
விஜய் வசந்த்: இந்த வந்தே பாரத் ரயில் சேவையை நாகர்கோவிலில் இருந்து சென்னை வரை என இயக்கினால் கூடுதல் பலனாக இருக்கும் என்பதே ரயில் பயணிகள் சங்கங்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.. கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த்தும் தொடர்ந்து இது சம்பந்தமாக மத்திய அரசுக்கு கோரிக்கைகளை தொடர்ந்து விடுத்து வருகிறார்..
சென்னையில் இருந்து வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டால் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு பயன் அளிப்பதுடன் தென் தமிழகத்தின் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பயன் பெறலாம் என்று ரயில்வே நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டே வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் இன்னொரு கோரிக்கையை விடுத்துள்ளார்.
ரயில்வே அமைச்சர்: நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலை, கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சரிடம் கடிதம் கொடுத்து வலியுறுத்தியுமிருக்கிறார் வைகோ.
அந்த கோரிக்கையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் மிக முக்கியமான நகரம் கோவில்பட்டி. மேலும், சிவகாசிக்கு அடுத்தபடியாக தீப்பெட்டி தொழிலில் சிறந்து விளங்குவது கோவில்பட்டி தான். மதுரை கோட்ட ரயில்வே வருவாயில் மூன்றாம் இடத்தில் பெரும் பங்கு வகிப்பது கோவில்பட்டி நகரம். இந்த சிறப்பு மிக்க கோவில்பட்டி நகரில் 'வந்தே பாரத்' ரயில் நின்று செல்ல ஆவணம் செய்யவேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளார்.
பயங்கர குஷி: இக்கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் ரயில்வே அமைச்சரும், கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல பரிசீலிக்கப்படும் என உறுதியளித்தாக வைகோ தெரிவித்துள்ளார். ஏற்கனவே தாம்பரத்தில் இந்த ரயில் நிற்கவில்லை என்ற குறை இருந்தது.. அந்த குறையையும் ரயில்வே தீர்த்துவிட்ட நிலையில், வைகோவின் கோரிக்கையும் விரைவில் நிறைவேற போவதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications