திருவேற்காடு கருமாரியம்மன் கோயில்ல பார்த்தீங்களா? அதுவும் அம்மன் "கழுத்தில்".. பரபர சென்னை மதுரவாயல்
சென்னை: திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் நடந்த சம்பவம், ஒட்டுமொத்த பக்தர்களையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.. யார் அந்த சண்முகம்?
சென்னை மதுவராயிலை அடுத்துள்ளது திருவேற்காடு... இந்த கோயில், தமிழக அரசின் அறநிலையத்துறையின் மேற்பார்வையின் கீழ் உள்ளது. இந்த திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம்..

பக்தர்கள்: பக்தர்களுடைய மிகவும் பிரசித்தி பெற்ற இக்கருமாரியம்மன் கோயில் திகழ்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, அம்மன் கோயில்களிலேயே மிகவும் சக்திவாய்ந்த தலங்களாக போற்றப்படும் சமயபுரம், மேல்மலையனூர் கோயில்களுக்கு இணையாக, இந்த கோயிலும் போற்றப்பட்டு வருகிறது. இங்கு தினமும் மாலை நேரங்களில் அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்யப்படுவது வழக்கம்.
இந்நிலையில், இந்த கருவறையில் உள்ள உற்சவர் கருமாரியம்மன் சிலையிலிருந்த 8 சவரன் தாலிச்சங்கலி திடீரென மாயமாகி உள்ளது.. தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவதால், அம்மன் சிலையின் கழுத்திலிருந்த சங்கிலி மாயமாகி உள்ளதை கண்டு அதிர்ந்து போயுள்ளனர். இதனால், கோயில் நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
அம்மன் கோயில்: இதையடுத்து விசாரணையும் உடனடியாக ஆரம்பமாகி உள்ளது.. அப்போதுதான், இந்த கோயிலின் அர்ச்சகரே தாலியை திருடியது தெரியவந்துள்ளது.. இவர் கோயிலில் தின ஊதியத்தின் அடிப்படையில் வேலைபார்த்து வருகிறாராம். அவர் பெயர் சண்முகம்.. இதையடுத்து கோயில் பொறுப்பாளர் கனகசபரி அளித்த புகாரின் பேரில், திருவேற்காடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இத்தனை பேர் வந்து செல்லும் புகழ்பெற்ற அம்மன் கழுத்திலிருந்தே தாலி திருடப்பட்டுவிட்டதே என்று பக்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.. எனினும், இதுபோன்ற திருட்டு இனிமேல் நடக்காமல் பார்த்து கொள்ளுமாறு பக்தர்கள் கோயில் நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
சண்முகம்: அர்ச்சகர் சண்முகத்துக்கு பாபு என்று இன்னொரு பெயரும் உள்ளது. 40 வயதாகிறது.. கடந்த ஒரு வருடமாகத்தான் இங்கு வேலை பார்த்து வருகிறாராம்.. இன்னும் கல்யாணம் ஆகவில்லை. இந்த வேலை அவருக்கு தற்காலிகமானது.
சண்முகத்துக்கு ஏதோ பணத்தேவை இருந்துள்ளதாக தெரிகிறது.. அதனால் கொஞ்ச நாட்களாகவே, நிறைய பேரிடம் கடன் கேட்டு வந்திருக்கிறார்.. பணம் யாரும் தரவில்லை.. அதனால், அம்மன் கழுத்தில் இருந்த நகையை திருடியிருக்கிறார்..
நகையை திருடிவிட்டு, நேராக அடகுக்கடையிலும் வைத்துவிட்டார்.. அதன்பிறகு, அடகு வைத்த நகையை திருப்பி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.. எனினும், சண்முகம் இன்னும் தலைமறைவாக இருக்கிறார்.. அவரை போலீசார் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications