உல்லாசத்துக்கு பின் "மூளை வறுவல்".. பதறிய நபரை..ஓங்கி அறைந்த பெண்.. சென்னை போலீசுக்கு உதவிய "2 க்ளூ"
சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் நடந்த பெண் கொலையில் பல்வேறு அதிரடி தகவல்கள் வெளியாகி வருகின்றன.. சென்னைவாசிகள் இந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.. கொலையாளியை கைது செய்ய, போலீசாருக்கு சிசிடிடிவி கேமரா பெரிதும் கைகொடுத்துள்ளது.
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் குமரன் குடில் குடியிருப்பு பகுதியில்தான், ரத்த ரத்தக்கறை படிந்த சூட்கேஸை போலீசார் கண்டெடுத்துள்ளனர். பெட்டிக்குள், பெண்ணின் சடலம் துண்டு துண்டாக இருந்தபோதே, இந்த கொலையின் தீவிரத்தை போலீசார் உணர்ந்து கொண்டனர்.

குடும்பத்தினர்: அந்தநேரத்தில்தான், தங்கள் மகள் மாயமானதாக, பெண்ணின் குடும்பத்தினர் புகார் கொடுக்கவும், போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இதற்காக தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. அந்த பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்ய துவங்கினர்.
அதில், 18-ம் தேதி அதிகாலை 3 மணியளவில், ஒரு நபர் ட்ராலி சூட்கேஸை தள்ளிக்கொண்டே தெருவில் நடந்து வருவது பதிவாகியிருந்தது.. ஒருநிமிடம் அங்கேயே நின்ற அந்த நபர், சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, சூட்கேஸை ரோட்டோரம் வீசிவிட்டு, அவசர அவசரமாக நடந்து மறைவதும் கேமராவில் பதிவாகியிருந்தது. இதுதான் போலீசாருக்கு கிடைத்த முதல் க்ளுவாகும்.
வீடியோ: இந்த வீடியோவை அடிப்படையாக வைத்து, அந்த பகுதியிலுள்ள வீடுகளை போலீசார் நோட்டமிட்டார்கள். அப்போது, பார்த்தசாரதி நகர் 4-வது தெருவில் உள்ள, ஒரு வீட்டில் குற்றவாளி பதுங்கியிருக்கும் தகவல் கிடைத்தது.. இதனால் சந்தேகத்தின்பேரில் அந்த வீட்டு படிக்கட்டில் ஏற முயன்றார்கள்.. அப்போதுதான், படிக்கட்டு முழுக்க ரத்தக்கறை இருந்ததை கண்டு அதிர்ந்தனர். இதுவே போலீசாருக்கு கிடைத்த 2வது க்ளுவாகும்.
பிறகு, வீட்டிற்குள் போலீசார் நுழைந்ததுமே மணிகண்டன் வெலவெலத்து போனார்.. கொலை பற்றி கேட்டதற்கு, தனக்கு எதுவுமே தெரியாது என்று சாதித்துள்ளார்.. தான் கொலை செய்யவில்லை என்று சத்தியம் செய்து கொண்டே இருந்தாராம். பிறகு அவரை அழைத்துவந்து, படியிலிருந்த ரத்தக்கறையைக் காட்டி விசாரித்தபோதுதான், உண்மையை ஒப்புக்கொண்டாராம்.
திருவையாறு: ஆனால், அவரிடமிருந்து இப்படியொரு வாக்குமூலம் வரும் என்று போலீசாரே எதிர்பார்க்கவில்லை.. சம்பவத்தன்று திருவையாறுக்கு அக்கா, மாமா, குழந்தையை அழைத்து கொண்டு செல்லவும், வீட்டில் தனிமையில் இருந்தபோதுதான், பாலியல் தொழிலாளியை தேடியிருக்கிறார். இதற்கு பெண் புரோக்கர் ஒருவரை பிடித்து தீபா என்ற பாலியல் பெண்ணை 2 ஆயிரம் ரூபாய்க்கு புக் செய்துள்ளார்.
வாடகை வீடு: காரணம், வாடகை வீட்டில் வசித்து வருவதால் அக்கம் பக்கத்தில் யாரேனும் பார்த்து விட்டால் அக்காவிடம் சொல்லி விடுவார்கள் என்று மணிகண்டன் பயந்துள்ளார்.. மணிகண்டனின் இந்த பயத்தைதான், தீபா தனக்கு சாதகமாக பயயன்படுத்தி கொள்ள முயன்றுள்ளார்.. அதனால், வெறும் 2 ஆயிரம் ரூபாய் வேணாம், 12 ஆயிரம் ரூபாய் வேண்டும் என்றும், பணத்தை கொடுக்கவிட்டால் அக்கம் பக்கத்தினரை கூட்டி அசிங்கப்படுத்துவேன் என்றும் மிரட்டியிருக்கிறார் தீபா.
தீபா மரணம்: சுத்தியலில் ஓங்கி அடைத்து, தீபா இறந்துவிடவும், 18-ம் தேதி காலை ஓஎம்ஆர் சாலை பல்லவன் குடியிருப்பு பகுதியிலுள்ள கடைக்கு சென்று 3000 ரூபாய் மதிப்புள்ள சூட்கேஸ் ஆர்டர் செய்து வாங்கி வந்துள்ளார்.. அதற்கு பிறகுதான் உடலை வெட்டி நள்ளிரவு 3 மணிக்கு கொண்டு போய் வீசிவிட்டு வந்துள்ளார்.
சூட்கேஸை வீசுவதற்காக, அந்த தெருவில் சுற்றுமுற்றும் பார்த்து கொண்டே வந்த மணிகண்டனை, அதே பகுதியிலிருந்த சிசிடிவியும் உற்றுப் பார்த்து கொண்டிருந்ததை மணிகண்டன் அறியவில்லை..!!!












Click it and Unblock the Notifications