பெங்களூர் பந்த்.. சென்னை- பெங்களூர் செல்லும் தமிழக பேருந்து இயக்கம் இன்று இரவு முதல் நிறுத்தம்
சென்னை: சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் பேருந்துகள் இன்று இரவு 8 மணி முதல் நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு கர்நாடகா இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. காவிரி நீரை திறக்கும்படி கர்நாடகா அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி கர்நாடகா அரசுக்கு கடந்த 18-ஆம் தேதி உத்தரவிட்டது. இதை ஏற்க கர்நாடகா மறுத்துவிட்டது.
இந்த நிலையில் மண்டியாவில் விவசாயிகள், கன்னட அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதனால் தமிழகம்- கர்நாடகா இடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது. காவிரி பிரச்சினை தொடர்பாக நாளை பெங்களூரில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த பந்த் போராட்டம் மாலை 6 மணிக்கு முடிவடையும். இந்த நிலையில் தமிழர்களின் உடைமைகள் பாதிக்கப்படும் என்பதால் பெங்களூர் செல்லும் தமிழக லாரிகளை எல்லையிலேயே நிறுத்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது. அந்தந்த மாநிலங்களில் இருந்து வரும் லாரிகள் அந்தந்த மாநில எல்லைகளில் நிறுத்தி வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் பேருந்துகள் இன்று இரவு 8 மணி முதல் எல்லையிலேயே நிறுத்தப்படும் என தெரிகிறது. நாளை மாலை 6 மணிக்கு மேல் சூழலுக்கேற்ப மீண்டும் பேருந்துகள் இயக்கம் குறித்து முடிவு செய்யப்படும்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications