சென்னை டூ பெங்களூருக்கு ஒரு சினிமா படம் பார்க்கும் நேரத்தில் சல்லுனு செல்லலாம்! எக்ஸ்பிரஸ்வே 90%ரெடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெங்களூர்- சென்னை விரைவுச் சாலை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவலை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

இந்த சாலை பணிகள் முடிவடைந்துவிட்டால் வெறும் 3 மணி நேரத்தில் சென்னையிலிருந்து பெங்களூருக்கும் பெங்களூரிலிருந்து சென்னைக்கு பறக்கலாம்.

chennai bangalore tamil nadu

இந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்கள் உள்ளன. அவற்றில் சென்னை, பெங்களூர் மக்கள்தொகை அதிகம் இருக்கும் மாநகரங்களாகும். இங்கு ஐடி தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதால் மற்ற நகரங்களில் இருந்து மக்கள் இங்கு இடம்பெயர்கிறார்கள்.

இங்கு Cost of Living அதிகம் என்றாலும் அதற்கேற்ப ஊதியம் கிடைக்கும். இந்த இரு நகரங்களுக்கிடையேயான பயணிக்கும் நேரம் குறைந்தால் இது இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மிகவும் நன்மையாகும். அது மட்டுமல்லாமல் இங்கு தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கவும் உகந்ததாகும்.

சென்னையும் பெங்களூரும் மெட்ரோ நகரங்கள் என்பதை இவற்றை சுற்றியுள்ள நகரங்களும் வேகமாக வளர்ந்து வருகின்றன. இதையொட்டி தமிழக அரசு சென்னை நகரங்களை சுற்றியிருக்கும் துணை நகரங்களில் சாலை போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இது போன்ற மெட்ரோ நகரங்களிலும் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களிலும் பன்னாட்டு நிறுவனங்கள் பெரிதும் எதிர்பார்ப்பது சாலை போக்குவரத்தைத்தான். சாலைகள் சீராக இருந்து, பயண நேரமும் குறைந்தால் அந்த நிறுவனங்கள் தொழில் செய்ய உகந்ததாக இருக்கும். இதனால்தான் சென்னை- பெங்களூர் இடையே விரைவுச்சாலை போடும் பணிகள் நடந்து வருகின்றன.

சுமார் 17ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த சாலை உருவாக்கப்பட்டு வருகிறது. இவை 3 கட்டங்களாக அமைகிறது. இந்த சாலை NE-7 என அழைக்கப்படுகிறது. இது 262 கி.மீ. தூரத்திற்கு தயாராகி வருகிறது. முதல் 71 கி.மீ. தொலைவு சாலை முழுக்க கர்நாடகா மாநிலத்தில் அமைக்கப்படுகிறது.

கேஜிஎப் முதல் ஹோஸ்ஹோட்டிற்கும் இடையே அமைக்கப்படும் இந்த விரைவுச் சாலை நவம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என தெரிகிறது. இந்த இரு நகரங்களுக்கும் இடையே பயண தூரமானது ஒன்றரை மணி நேரமாக இருந்தது. தற்போது புதிய சாலையால் 45 நிமிடங்களாகியுள்ளது. இந்த 71 கி.மீ.ரை தவிர மற்ற பகுதிகள் தமிழகத்தில் அமைகிறது.

இதனால் சென்னையிலிருந்து பெங்களூருக்கும் பெங்களூரில் இருந்து சென்னைக்கும் 3 மணி நேரத்தில் பயணிக்கலாம். இந்த விரைவுச்சாலை பணிகள் முழுவதும் அடுத்த ஆண்டு மார்ச்சில் முடியும் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது ஆகஸ்ட் மாதம் முடிவடைகிறது. இதனால் இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்ததும். தினமும் சென்னை- பெங்களூருக்கும் பயணிக்கலாமே!

அது போல் ஸ்ரீபெரும்புதூர் - காரைப்பேட்டை இடையிலான பணிகள் 56.92% அளவுக்கும், காரைப்பேட்டை - வாலாஜாபேட்டை பணிகள் 74.90% அளவுக்கும் முடிவடைந்துள்ளது. இந்தப் பணிகள் 2025 மார்ச் மாதத்துக்குள் முழுமையாக முடிக்கப்பட்டு விடும். இது தவிர, சென்னை - திருப்பதி, மாமல்லபுரம் - முகையூர், தருமபுரி - தொரப்பள்ளி, பொள்ளாச்சி - மடத்துக்குளம், திண்டிவனம் - கிருஷ்ணகிரி, மேலூர் - காரைக்குடி, விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு, ஒட்டன்சத்திரம் - பழனி, திருமங்கலம் - வடுகப்பட்டி உள்ளிட்ட பல்வேறு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்படும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+