டிரம்ப் வர்த்தக போரால்.. சென்னைக்கு அடித்த பயங்கர லக்.. விக்கித்து போன சீனா.. இதெல்லாம் வேற லெவல்
சென்னை: இந்தியாவில் இருந்து ஆப்பிள் போன்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஆப்பிள் போன்களை ஏற்றுமதி செய்யும் மற்ற நாடுகளான சீனா, தாய்லாந்துக்கு இந்தியாவை விட அதிக வரிகள் விதிக்கப்படுகிறது. இதனால் இந்தியாவில் இருந்தே ஏற்றுமதி செய்யலாம் என்று ஆப்பிள் தலைமையகம் முடிவு செய்துள்ளது. இதனால் சென்னையில் இருந்து அதிக அளவில் ஆப்பிள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
முக்கியமாக டிரம்ப் வரி விதிப்பிற்கு முன்பு மட்டும் சென்னையில் இருந்து மட்டும் கடந்த வாரம் 5 விமானங்களில் அமெரிக்காவிற்கு ஐபோன்கள் ஏற்றுமதி ஆகி உள்ளன. மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் மீண்டும் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் FY25 வரை தமிழ்நாடு $9.36 பில்லியன் மதிப்பிலான மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்து உள்ளது. இந்தியாவின் $26.12 பில்லியன் ஏற்றுமதியில் 39% பங்களிப்பை தமிழ்நாடு அளித்துள்ளது. FY24 இல் $9.56 பில்லியனை தமிழ்நாடு ஏற்றுமதி செய்தது. அதைவிட சற்று குறைவாக இருந்தாலும், தமிழ்நாடு தொடர்ந்து ஏற்றுமதியில் முதல் மாநிலமாக உள்ளது.

சென்னையில் இருந்து ஏற்றுமதி ஏன்?
கர்நாடகா 4.95 பில்லியன் டாலர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா முறையே 3.78 பில்லியன் டாலர் மற்றும் 2.72 பில்லியன் டாலர்களைப் பதிவு செய்துள்ளது. 2024 டிசம்பரில், தமிழ்நாட்டின் ஏற்றுமதி நவம்பரில் $1.534 பில்லியனில் இருந்து 1.524 பில்லியன் டாலராக சிறிது சரிவைக் கண்டது, ஆனாலும் மாநிலம் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
ஏற்கனவே 2023-24 நிதியாண்டில் 32.84% மொத்த பங்குடன் 9.56 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த எண்ணிக்கை வெறும் 1.86 பில்லியனாக இருந்தது. தமிழ்நாடு சாதனை: தமிழ்நாடு ஏற்றுமதியின் எண்ணிக்கை இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 39% ஆகும். அதே காலகட்டத்தில் இந்தியாவில் மொத்தமாக செய்யப்பட்ட மின்னணு ஏற்றுமதியை $16.48 பில்லியன் ஆகும். கடந்த வருடம் ஏப்ரல்-அக்டோபர் மாதங்களில் மட்டும் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 90% சதவிகித மின்னணு ஏற்றுமதியை தமிழ்நாடு செய்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இருந்து தமிழ்நாடு அதன் சாதனையை இந்த வருடம் முறியடிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் காரணம்
தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் ஐபோன் உற்பத்தி இதற்கு முக்கிய காரணம் ஆகும். சென்னையில் கோடிக்கணக்கில் ஐபோன் உற்பத்தி செய்யப்படுகிறது. டாடா எலக்ட்ரானிக்ஸ் தனது ஐபோன் அசெம்ப்ளி யூனிட்டை ஓசூரில் உள்ள புதிய தளத்தில் மேலும் விரிவுபடுத்த உள்ளது. ஏற்கனவே முன்மொழியப்பட்ட விரிவாக்கத்துடன் மேலும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளனர். இங்கே கிட்டத்தட்ட 2 லட்சம் ஐபோன்களை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் கிளஸ்டர் இங்கே உருவாக்கப்படுகிறது. உலகிலேயே பெரிய ஐபோன் தொழிற்சாலைகளில் ஒன்றாக இது இருக்கும் என்கிறார்கள்.
டாடா குழுமம் ஓசூரில் உள்ள ஐபோன் கேசிங் யூனிட்டின் தற்போதைய ஆலையை விட இரண்டு மடங்கு அளவுக்கு விரிவுபடுத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்தியாவின் மிகப் பெரிய ஐபோன் அசெம்ப்ளி ஆலையை ஓசூரில் டாடா உருவாக்க உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் டிரம்ப் கூடுதல் வரி விதித்துள்ளார். இந்த வரி விதிப்பை தவிர்க்கும் விதமாகவே அது அமலுக்கு வரும் முன்பே ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.
அதிகரித்த ஏற்றுமதி
இந்தியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் பல்வேறு விற்பனையாளர்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஐபோன்களின் எண்ணிக்கையை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கி உள்ளனர் . உதாரணமாக டிரம்ப் வரி விதிப்பிற்கு முன்பு மட்டும் சென்னையில் இருந்து கடந்த வாரம் 5 விமானங்களில் அமெரிக்காவிற்கு ஐபோன்கள் ஏற்றுமதி ஆகி உள்ளன.
அமெரிக்காவிற்கு ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.11,000 கோடி மதிப்பிலான ஐபோன் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. அது தற்போது ரூ.20,000 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. ஏப்ரல் 2 முதல் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட கூடுதல் வரி விதிப்பை தவிர்க்கும் விதமாக செய்யப்பட்ட நடவடிக்கை ஆகும்.
இந்தியாவில் உள்ள ஆப்பிளின் விற்பனையாளர்கள் உலக அளவில் ஐபோன்களை FY25 இல் ஏறக்குறைய ரூ. 1.5 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்துள்ளனர். இது FY24 இல் ரூ.85,000 கோடியாக இருந்தது. தற்போது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உயர்ந்து உள்ளது.
கூடுதல் வரி விதிப்பு
அமெரிக்கா பரஸ்பர வரி விதித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்தியா, வியட்நாம் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் அதிபர் டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், வேறு சில நாடுகள் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் வரிவிதிப்புகள் பற்றி ஆலோசனை செய்து வருகிறார். இந்தியாவில் மோடி சார்பாக வெளியுறவுத்துறை சமாதானம் செய்ய முயன்று வருகிறதாம். இதற்காக டிரம்ப்பை சமாதானம் செய்ய டீம் ஒன்று களமிறக்கப்பட்டு உள்ளதாம் .
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தக போரை தொடங்கி உள்ளார். உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் மீது வர்த்தக போரை அறிவித்து உள்ளார். 10% அடிப்படை வரி உலகம் முழுக்க உள்ள எல்லா நாடுகள் மீதும் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய பதிலடி வரி விதிப்பின் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீத வரியையும் சீனா 34 சதவீத வரியையும் எதிர்கொள்கிறது. இந்தியா 26 சதவீதம், தென் கொரியா 25 சதவீதம் மற்றும் ஜப்பானுக்கு 24 சதவீதம் வரி விதிக்கப்படும்.
அதிகபட்சமாக கம்போடியா மீது 49%, வியட்நாம் மீது 46%, இலங்கை மீது 44% வரி விதிக்கப்பட்டு உள்ளது. சீனா மீது 34%, ஐரோப்பிய ஒன்றியம் மீது 20%, ஜப்பான் மீது 24% வரிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பதிலடி வரிகள் என்றால் என்ன?
முதலில் இது என்ன வர்த்தக போர் என்று பார்க்கலாம் . அமெரிக்க அதிபர் டிரம்ப் reciprocal tariff எனப்படும் வரிகளை விதிக்க உள்ளார். அதாவது பதிலடி வரி. அதாவது இந்தியா அமெரிக்கா மீது விதிக்கும் வரியை அப்படியே இந்தியா மீது அமெரிக்கா விதிக்கும். அதாவது ஒரு துறையில் உள்ள ஒரு பொருளுக்கு இந்தியா 30 சதவிகிதம் வரி விதிக்கிறது. அமெரிக்கா 10 சதவிகிதம்தான் வரி விதிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த புதிய விதிப்படி அமெரிக்காவும் அதே 30% வரியை இனி விதிக்கும்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏப்ரல் 2ம் தேதி இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது பதிலடி வரிகளை விதிக்க போவதாக அறிவித்து உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்கான அனைத்து எஃகு இறக்குமதிக்கும் 25% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். விவசாய பொருட்கள் மீது 100% வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications