ஒன்றல்ல..இரண்டல்ல.. 10 இடங்களில் சென்னையில் வரும் புதிய மாஸ் பாலங்கள்.. அரசின் மாபெரும் முடிவு!
சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சென்னையில் பல இடங்களில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது, நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னை மாநகராட்சி பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
சமீபத்தில் எஸ்பிக்கள், மாவட்ட செயலாளர்கள் உடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையில், சாலை விபத்துகளால் மிக அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பது எனக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது. இந்த நிலையை மாற்ற காவல்துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்துத் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து திட்டங்களை வகுத்து, விபத்துகளைக் குறைப்பது குறித்து ஆய்வு செய்திட முயற்சியிலே முழுமையாக ஈடுபட வேண்டும்.
சென்னை உள்ளிட்ட தரக்கூடிய ஒன்றாக பல இருப்பது மாநகரங்களில் பொதுமக்களுக்கு சிரமம் போக்குவரத்து நெரிசல். குறைப்பதற்கான ஒரு சிறப்பு செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். இதற்கான செயல் திட்டத்தை உடனே கொண்டு வர வேண்டும், என்று உத்தரவிட்டு இருந்தார்.

பாலங்கள் கட்டுமானம்: இந்த நிலையில்தான் சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 10 புதிய மேம்பாலங்கள் கட்டுவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை சிறப்பு அதிகாரிகள் முடுக்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் 2024க்குள் மேம்பாலம் பணிகள் நிறைவடையும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் இன்னும் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்குப் பிறகு, லாக்டவுன் முடிந்து வாகனங்கள் ஓட தொடங்கியதும், சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.
( ஈசிஆர் அடியோடு மாறுது.. ரூ.25 கோடியில் வருது பிரம்மாண்ட வசதி.. குஷியில் இளசுகள்.. என்னன்னு பாருங்க)
போக்குவரத்து: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஆகியோர் கொண்ட குழு அமைத்து கள ஆய்வு செய்து போக்குவரத்து தடையின்றி செல்வதை உறுதி படுத்த வேண்டும். பணி மேற்கொள்ளும் இடங்களில் தடுப்பரன்கள் (barricading) தக்க வடிவமைப்புடன் மேற்கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணைந்து சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட் மேற்கொண்டு வரும் தடுப்பரன் போன்று அமைய நடவடிக்கை எடுக்குமாறும் தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
மேம்பாலம்: இதையடுத்தே சென்னையில் மேம்பாலம் கட்டும் பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. தற்போது 10 இடங்களில் மேம்பாலம் கட்டும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்காக, சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் மேம்பாலம் கட்ட நிலம் கையகப்படுத்தும் பணியை துரிதப்படுத்த சென்னை ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்னை மாநகராட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
மணலி மண்டலத்தை அடிப்படையாகக் கொண்ட வடபெரும்பாக்கம் மேம்பாலத்திற்கு 13218 சதுர அடி பரப்பளவில் 14 அடுக்குகள் கையகப்படுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு கடந்த மாதம் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

வளசரவாக்கம் மண்டலத்தில், செக்டார் 143 மற்றும் 144ல் உள்ள PH சாலை மற்றும் யூனியன் சாலையை இணைக்கும் சின்ன நொளம்பூரில் கூவம் குறுக்கே மேம்பாலம் கட்ட 47318 சதுர அடி நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
முக்கிய பாலம் : இது போக அண்ணாசாலையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை புதிய பாலம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த பகுதியில் முக்கியமாக நந்தனம் சிக்னல் உள்ள பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக இங்கே நீண்ட பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. ₹621 கோடி மதிப்பில் 3.5 கி.மீ தொலைவு புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக இங்கே நீண்ட பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. ₹621 கோடி மதிப்பில் 3.5 கி.மீ தொலைவு புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இந்த பாலத்தால் பொதுமக்களுக்கு பல்வேறு பயன்கள் உள்ளன. அவை என்னென்ன என்று வரிசையாக பார்க்கலாம்.
சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை பாலம் இருப்பதால் இடையில் நந்தனத்தில் நீண்ட நேரம் நிற்க வேண்டியது இல்லை. நந்தனம் சிக்னல் தொல்லை இனி இல்லை. அண்ணாசாலை செல்ல இந்த சாலையை பயன்படுத்துபவர்கள் இனி அந்த பாலத்தில் சென்றால் 5 சிக்னல்களில் நிற்க வேண்டியது இல்லை. இந்த பாலத்தில் பயண நேரம் அதிகபட்சம் 5 நிமிடம்தான். அதுவே கீழே சாலையில் சென்றால் பயண நேரம் 15 நிமிடம் ஆகும். பீக் நேரங்களில் இதை விட கூடுதலாக இருக்கும்.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications