2000 ஏக்கர்.. நியூயார்க் ஸ்டைல்.. இந்தியாவே வியக்கும்.. சென்னைக்கு அருகே வருகிறது குளோபல் சிட்டி!
சென்னை: தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார், இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது. பன்முக வளர்ச்சியை நோக்கி நடைபோடுகிறது இருமொழிக்கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதால் உலக அளவில் தமிழர்கள் தடம் பதிக்கின்றனர். இந்தியாவின் 2வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு.. தமிழ்நாட்டை மேலும் முன்னேற்றும் விதமாக சென்னைக்கு அருகே புதிய நகரம் அமைக்கப்படும் என்று அறிவித்து உள்ளார்.
சென்னைக்கு அருகே 2000 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய நகரம் அமைக்கப்படும். இதில் ஐடி பார்க்குகள், பன்னடுக்கு கட்டிடங்கள், புதிய ஐடி நிறுவனங்கள், மெட்ரோ, உலக தர வசதி, புதிய நிறுவனங்கள், வெளிநாட்டில் இருப்பது போன்ற வசதிகளுடன் குளோபல் சிட்டி அமைக்கப்படும், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. உலக தரமான வசதிகள் எல்லாம் இருக்கும் வகையில் இந்த சிட்டி அமைக்கப்பட உள்ளது.

தமிழக பட்ஜெட்டில் வெளியான மற்ற அறிவிப்புகள்
சென்னை மாநகரப்பகுதியில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் செயல்படுத்தப்படும்.; இதன்மூலம் ஒரு பகுதியில் உபரியாக உள்ள தண்ணீரை, மற்றொரு பகுதிக்கு கொண்டு செல்லப்படும்.7 மழைநீர் உறிஞ்சு பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும். சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி வரை 3 கி.மீ தூரத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.
திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தாம்பரத்தில் நிறுவப்படும். அடையாறு நிதி சீரமைப்பு பணியில் சைதாப்பேட்டை முதல் திரு.வி.க பாலம் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும்.
கிராம சாலைகளை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,087 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.3790 கோடியை நிதி ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. இந்த நிதியை விரைந்து ஒதுக்க கோரிக்கை விடுக்கிறோம்.
ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம், ராமநாதபுரத்தில் நாவாய் அருங்காட்சியகம் அமைக்கப்படும். மேலும் 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும். அகர மொழிகளின் அருங்காட்சியகம் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் அமைக்கப்படும். ஆண்டுதோறும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும்.
மேலும் பல இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்படும். மேலும் 47 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பழம்பெரும் ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் பிற இந்திய பெருநகரங்கள், சிங்கப்பூர், கோலாலம்பூர் நகரங்களிலும் தமிழ்ப்புத்தக கண்காட்சி நடத்தப்படும். களிருக்கு வாக்குரிமை வழங்கிய சென்னை மாகாணத்தின் வழியில் அவர்களுக்கு சொத்துரிமை வழங்கியது தமிழ்நாடு
இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது. பன்முக வளர்ச்சியை நோக்கி நடைபோடுகிறது இருமொழிக்கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதால் உலக அளவில் தமிழர்கள் தடம் பதிக்கின்றனர். இந்தியாவின் 2வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு
எத்தனை தடைகள் வந்தாலும் சமநிலை தவறாது, நம் உரிமைகளைக் காக்கும் முதலமைச்சரை நாடே பாராட்டிக்கொண்டு இருக்கிறது என்று நிதி அமைச்சர் இந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications