சபரிமலைக்கு போறீங்களா! சென்னை டூ கோட்டயம் வந்தே பாரத் நாளை முதல் இயக்கம்! எங்கெல்லாம் நிற்கும்?
சென்னை: சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் நலனுக்காக சென்னையிலிருந்து கோட்டயத்திற்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்தியாவில் மொத்தம் 34 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வசதி, ஜிபிஎஸ் வசதி உள்ளிட்டவைகளுக்காக மக்கள் இந்த ரயிலை விரும்புகிறார்கள். ஆனால் இதில் கட்டணம் அதிகம் என்பதும் ஒரு கவலையாக உள்ளது. முக்கியமாக இந்த ரயில்களில் சென்றால் பயண நேரம் குறையும்.
இந்த ரயில்கள் மக்களின் சாய்ஸாக இருக்கின்றன. தமிழகத்தை பொருத்தமட்டில் சென்னை சென்ட்ரல்- மைசூரு, சென்னை சென்ட்ரல்- கோவை, சென்னை சென்ட்ரல்- விஜயவாடா, சென்னை எழும்பூர்- நெல்லை என 4 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்ளன. அடுத்தகட்டமாக கோவை - பெங்களூரு, சென்னை எழும்பூர்- கன்னியாகுமரி ஆகிய வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் சபரிமலை ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சென்னை சென்ட்ரல்- கோட்டயம் இடையே சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ரயில் எண் 06151 கொண்ட எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் - கோட்டயம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் டிசம்பர் 15, 17, 22, 24 ஆகிய நாட்களில் இயக்கப்படும்.
இது சென்னை சென்ட்ரலில் காலை 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 7.20 மணிக்கு கோட்டயம் ரயில் நிலையத்தை அடையும். இந்த ரயில் காட்பாடி, சேலம், ஈரோடு, போடனூர், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் டவுன் ஆகிய ரயில் நிலையங்களில் இரு மார்க்கங்களிலும் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டயத்தில் இருந்து சபரிமலைக்கு 95 கிலோமீட்டர் தூரம் உள்ளது. எனவே கோட்டயம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்துகள், கார்கள் மூலம் சாலை வழிப் பயணத்தை மேற்கொள்ளலாம். இரண்டரை மணி முதல் 3 மணி நேரத்திற்குள் சென்று விடலாம். ஆனால் வாகனங்களில் சபரிமலைக்கு செல்வோர் பம்பை வரை அனுமதிக்கப்படுவர்.
அதன்பிறகு அங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரம் பக்தர்கள் நடந்து சபரிமலைக்கு சென்று ஐயனை தரிசிக்க வேண்டும். தற்போது கார்த்திகை மாதம் என்பதால் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். இதனால் அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி ஒரு சிறுமியும் ஒரு ஆணும் உயிரிழந்தனர்.
அது போல் பம்பையில் தனது தந்தை காணாமல் போனதால் சிறுவன் ஒருவன் போலீஸாரிடம் கையெடுத்து கும்பிட்டு தந்தையை கண்டுபிடித்துக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ள காட்சிகளும் வெளியாகியிருந்தன. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் சுணக்கம் ஏற்படுவதால் போலீஸாருக்கும் தேவஸ்வம் போர்டு நிர்வாகிகளுக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்படுகிறது.
கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸார் குறைந்த அளவில் இருப்பதுதான் இந்த பிரச்சினைக்கு காரணம் என சொல்லப்படுகிறது. கார்த்திகை மாதம் பக்தர்கள் அதிகம் குவிவதையொட்டி தமிழக பக்தர்களுக்கு போதிய ஏற்பாடுகளை செய்து தருமாறு கேரள தலைமை செயலாளர் வேணுவிடம் தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கேட்டுக் கொண்டுள்ளார். இதையேற்று தமிழக பக்தர்களுக்கு தங்குமிட வசதிகளை கேரள தலைமைச் செயலாளர் வேணு செய்துக் கொடுத்துள்ளார். இதனிடையே கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலினும் கடிதம் எழுதியுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications