16 டீம்! ஒரு அணிக்கு 5 பேர்! களமிறங்கிய படை! சென்னைவாசிகளுக்கு குட் நியூஸ்! இனி நிம்மதியா இருக்கலாம்
சென்னையில் நாய் தொல்லை இருக்க கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை: சென்னையில் தெரு நாய் தொல்லையை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றையும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.
இந்தியா முழுக்க தெருநாய் பிரச்சனை அதிகரித்து உள்ளது. உள்ளூர் நாய்களை வாங்காமல் மக்கள் வெளிநாட்டு நாய்களை வாங்குவதால் உள்ளூர் நாய்கள் பல தெருநாய்களாக சுற்றி திரிந்து கொண்டு இருக்கின்றன.
இந்த நாய்கள் நாட்கள் செல்ல செல்ல மூர்க்கமாக மாறி சாலைகளில் செல்லும் மக்களையும் கடிக்க தொடங்கி உள்ளது. பல இடங்களில் தெரு நாய்கள் சாலைகளில் மக்களை கடிக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது.

தெரு நாய்கள்
சமீபத்தில் ஹைதராபாத்தில் தெரு நாய்கள் சேர்ந்து சிறுமி ஒருவரை கடித்து குதறியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் சென்னையில் நாய்கள் சேர்ந்து குரோம்பேட்டையில் பெண் ஒருவரை துரத்தியதில் அவர் விபத்துக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. சென்னை மட்டுமின்றி இந்தியாவில் சமீபகாலமாக தெரு நாய்கள் மனிதர்களை கடிப்பதும், அச்சுறுத்துவதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கேரளாவில் நாளொன்றுக்கு சராசரியாக குறைந்தது 20 பேராவது நாய்க் கடிக்கு உள்ளாகி வருகிறார்கள். இது கேரளாவில் மிகப்பெரிய சமூக பிரச்சனையாக மாறி உள்ளது.

நாய்க்கடி
நாய்க் கடியால் ஏற்படும் ரேபிஸ் வைரஸால் தாக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அம்மாநிலத்தில் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதை தடுக்க அம்மாநில அரசு தீவிரமாக முயன்று வருகிறது. முக்கியமாக இந்த நாய்க்கடி பிரச்சனையால் கேரளாவில் மாலை நேரத்திற்கு மேல் வெளியே நடமாடுவதையே மக்கள் தவிர்த்து வருகிறார்கள். அதேபோன்ற நிலைமை தமிழ்நாட்டிற்கும் வர கூடாது என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில்தான் சென்னையில் தெரு நாய் தொல்லையை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றையும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.

தெருநாய்
அதன்படி சென்னையில் இருக்கும் தெரு நாய்களை பிடித்து அதை கட்டுப்படுத்தி, வளர்த்து பின்னர் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர். சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 297 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல். இதற்காக பெரிய டீம் ஒன்றையும் களமிறக்கி உள்ளனர். இந்த டீமின் வேலை தெரு தெருவாக சென்று நாய்களை பிடிக்க வேண்டும். அதை லாரியில் ஏற்றி சென்று பின்னர் அதற்குரிய காப்பகங்களில் சேர்க்க வேண்டும். அங்கே இந்த நாய்களுக்கு ஊசி போட்டு பாதுகாப்பு கொடுக்கப்படும்.

கோபம்
பின்னர் நாய்களின் கோபத்தை தனித்து அதற்கு பயிற்சிகளை வழங்குவார்கள். இதற்காக தலா 5 பணியாளர்கள் கொண்ட 16 குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த 16 குழு சென்னையில் தினமும் வெவ்வேறு தெருக்களுக்கு செல்லும். அங்கே தெரு நாய்கள் இருந்தால் அதை பிடித்து காப்பகங்களுக்கு கொண்டு வருவார்கள். உங்கள் ஏரியாவில் இது போன்ற தெரு நாய்கள் தொல்லை இருந்தாலும் அதை பற்றி புகார் கொடுக்க முடியும். 1913 என்ற எண்ணில் புகாரளித்தால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் நாய் தொல்லை இருக்க கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications