சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்றால் 6 மாதம் சஸ்பெண்ட்.. சென்னை டிராபிக் போலீஸாருக்கு எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: வாகன ஓட்டிகளிடம் சென்னை பெருநகர போக்குவரத்து போலீஸார் லஞ்சம் வாங்கினால் 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

    புதிய வகை ஆன்லைன் மோசடி.. Boss Scam!!! டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை

    சென்னையில் பதிவு எண் பலகைகள் இல்லாமலும் பழுதடைந்த பதிவு எண் பலகைகளுடனும் வாகனங்கள் இயங்குவதாக சென்னை போக்குவரத்து காவல் துறைக்கு தொடர்ந்து புகார்களின் அடிப்படையில் சென்னை போக்குவரத்து காவல் துறை மூலம் கடந்த 4 நாட்கள் சிறப்பு தணிக்கை நடத்தப்பட்டது.

    இந்த சிறப்பு தணிக்கை தொடர்பாக சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் சென்னை போக்குவரத்து காவல் துறை நடத்திய இந்த சிறப்பு தணிக்கையில் மொத்தம் 828 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    நியூயார்க்கில் ஒரே வாரத்தில்.. மகாத்மா காந்தி சிலை 2-வது முறையாக சேதம்.. இந்தியா கண்டனம்! நியூயார்க்கில் ஒரே வாரத்தில்.. மகாத்மா காந்தி சிலை 2-வது முறையாக சேதம்.. இந்தியா கண்டனம்!

    98 சதவீதம்

    98 சதவீதம்

    வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட வாகனங்களில் 98 சதவீதம் இரு சக்கர வாகனங்களாகும். பழுதடைந்த பதிவு எண் பலகைகளுடன் வாகனத்தை செலுத்திய நபர்களுக்கு ரூ 100 அபராதம் விதிக்கப்பட்டு பதிவு எண் பலகை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம்.

    பதிவு எண்

    பதிவு எண்

    பதிவு எண் பலகை இல்லாமல் வாகனம் செலுத்தி வந்தவர்கள் மீது குற்றப்பின்னணி உள்ளதா? சம்மந்தப்பட்ட வாகனம் குற்றவழக்குகளில் தொடர்புடையதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் அது போல் எதுவும் கண்டறியப்படவில்லை. பதிவு எண் பலகை பொருத்துவது கட்டாயமாக்கப்படுவதன் மூலம் விபத்து ஏற்படும் போது சம்பந்தப்பட்ட வாகனங்களை அடையாளம் காண்பதும் எளிமையாகும் என்பதால் இந்த சிறப்பு தணிக்கையை தொடர்ந்து நடத்தவுள்ளோம்.

    மரணங்கள்

    மரணங்கள்

    சாலை விபத்தில் ஏற்படும் மரணங்கள் மறைக்கப்படுவதாக செய்திகளில் வரும் தகவல்கள் சென்னைக்கு பொருந்தாது, சென்னை காவல் துறை சாலை விபத்துகளில் ஏற்படும் மரணங்களை மறைக்கவோ குறைத்து காட்டவோ இல்லை. குறிப்பாக ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்கள் பிரிந்த பிறகு சென்னையில் கடந்த ஆண்டை காட்டிலும் 50 சதவீத இறப்புகள் குறைந்துள்ளன.

    சாலை விதிமீறல்கள்

    சாலை விதிமீறல்கள்

    சாலை விதிமீறல்கள் தொடர்பான அபராதத்தை வசூலிக்க பேடிஎம் பங்களிப்புடன் கியூ ஆர் கோடு நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் வாகன ஓட்டிகளிடம் பணமாகவோ அல்லது பொருளாகவோ லஞ்சம் வாங்கினால் 6 மாதக் காலம் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார் கபில்குமார்.

    English summary
    Chennai Traffic additional commissioner Kapilkumar warns Police should not get bribe.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X