பல பகுதிகளில் அரசு பேருந்து டிரைவர்களுக்கு அபராதம் விதித்த டிராபிக் போலீசார்.. பதிலடியா?
சென்னை: சென்னை தாம்பரத்தில் நோ பார்க்கிங்கில் நின்ற அரசு பேருந்துக்கு போலீசார் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதேபோல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலும் விதி மீறலில் ஈடுபட்ட அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை கண்காணித்து அபராதம் விதிக்கும் பணியில் ஆங்காங்கே டிராபிக் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக தலைநகர் சென்னையில் முக்கிய சாலைகளில் டிராபிக் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்துவது, சிக்னல் ஜம்பிங், ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் வருவது என விதிமீறல்களுக்கு ஏற்ப அபராதம் விதிக்கும் பணியில் டிராபிக் போலீசார் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக தனி நபர் வாகனங்களுக்கு தான் இதுபோன்ற அபராதம் அதிகமாக விதிக்கப்படுகிறது என்றும் அரசு வாகனங்களுக்கு விதி மீறல்கள் இருந்தாலும் போலீசார் கண்டுகொள்வது இல்லை என வாகன ஓட்டிகள் விமர்சிப்பதை பார்க்க முடியும்.
இந்த நிலையில்தான் சென்னை தாம்பரத்தில் இன்று அரசு பேருந்து ஒன்றுக்கு போக்குவரத்து போலீசார் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது அரசு பேருந்து டிரைவர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு;-
சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று சென்னையில் இருந்து புதுவைக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து தாம்பரத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது நோ பார்க்கிங்கில் பேருந்து நின்ற நிலையில், அதற்கு அங்கு பணியில் இருந்த டிராபிக் போலீசார் அரசு பேருந்து டிரைவருக்கு அபராதம் விதித்தனர்.
சென்னை தாம்பரம் மட்டும் இன்றி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலும் விதி மீறலில் ஈடுபட்ட அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதிக பயணிகளை ஏற்றி வரும் பேருந்துகளுக்கும் சில இடங்களில் அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு வந்த மற்றொரு அரசு பேருந்துக்கு இதே போல நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல கூடுதல் வேகத்தில் அரசு பேருந்துகளை இயக்கியதாகவும் சில இடங்களில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஓட்டுநர், நடத்துநர் சீருடை முறையாக அணிந்துள்ளனரா? என்று டிராபிக் போலீசார் சோதனை செய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் சொலப்பட்டாலும் இத்தனை நாட்கள் இன்றி திடீரென்று இப்படி, போலீசார் கெடுபிடி காட்டுவது குறித்து சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
குறிப்பாக நாங்குநேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டிக்கெட் எடுக்க மறுத்த சம்பவத்திற்கு பதிலடி கொடுப்பதற்காக போக்குவரத்து துறையுடன் காவல்துறை மோதிக்கொள்வது போல இந்த சம்பவங்களை பார்க்கும் போது தெரிகிறது என சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவிட்டு வருகிறார்கள். இதற்கிடையே, அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பது அரசு பேருந்து டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து நாங்குநேரி வந்த போது, ஆறுமுகப்பாண்டி எனும் காவலர் ஏறியுள்ளார். அவரிடம் டிக்கெட் எடுக்கும்படி கண்டக்டர் கேட்ட்டார். இதற்கு மறுப்பு தெரிவித்த காவலர் . "தானும் ஒரு அரசு ஊழியர் தான். டிக்கெட் எல்லாம் எடுக்க முடியாது" என வாக்குவாதம் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதையடுத்து, போக்குவரத்து துறையில் இருந்து அறிவிப்பு ஒன்று வெளியிட்டப்பட்டது. அதில்,
'அரசுப் பேருந்துகளில், காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி கிடையாது. வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணம் செய்ய முடியும். மற்ற அனைத்து நேரத்திலும் போலீசார் டிக்கெட் எடுத்துதான் பயணிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக நாங்குநேரி காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்து இருந்தது.
அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் காவலர் பயணித்தது சர்ச்சையான நிலையில், தற்போது நோ பார்க்கிங், அதிக பயணிகளை ஏற்றியது என அரசு பேருந்து டிரைவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications