ரொம்ப கவனம்.. சென்னையில் 44 இடங்களில்.. பாலங்களில் திடீரென முளைத்த வார்னிங் சிக்னல்.. என்ன அது?
சென்னை: சென்னையில் இருக்கும் சுரங்க பாலங்கள் உள்ளிட்ட பல இடங்களில் திடீரென எச்சரிக்கை அளிக்கும் அளவீடு ஒன்று பொருத்தப்பட்டு உள்ளது. மொத்தம் 44 இடங்களில் இந்த எச்சரிக்கை குறியீடூ பொருத்தப்பட்டு உள்ளது.
சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் (SWD) திட்டம் இன்னும் முடியவில்லை. இதற்கான காலக்கெடுவை மீண்டும் ஒருமுறை நீட்டித்து, பெரிய சென்னை மாநகராட்சி (GCC) பணியை முடிக்க இன்னும் பத்து நாட்கள் ஆகும் என்று அறிவித்துள்ளது. இங்கே பணிகள் இன்னும் நடந்து வருகின்றன.

மழை நீர் வடிகால்; வடகிழக்கு பருவமழை நேற்றே தொடங்கிவிட்டது. ஆனால் இன்னும் பணிகள் முடிவிற்கு வரவில்லை. பல இடங்களில் பணிகள் முடிந்தாலும் தோண்டப்பட்ட சாலைகள் இன்னும் மூடப்படவில்லை. உதாரணமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் கே.கே.நகர் அண்ணா பிரதான சாலை, நெடுஞ்செழியன் சாலை, பாடசாலை, மணலி சின்னசேக்காடு, மாதவரம், முகலிவாக்கம், வளசரவாக்கம், இராமாபுரம், மணப்பாக்கம் மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் பணிகள் முடிக்கப்பட்ட சாலைகளில் நிரந்தர சாலை வெட்டு சீரமைப்பு பணிகள், தற்காலிக சாலை வெட்டு சீரமைப்புப்பணிகள் இன்னும் முடியவில்லை. இங்கே பணிகள் நடந்து வருகின்றன.
மேலும் அண்ணா சாலை, ஜி.எஸ்.டி சாலை, ஈ.வெ.ரா. பெரியார் சாலை, 100 அடி சாலை, மேடவாக்கம் பிரதான சாலை, வேளச்சேரி- தாம்பரம் சாலை, மர்மலாங் பாலம் இரும்புலியர் சாலை, வளசரவாக்கம் வள்ளுவர் நகர் சாலை, எருக்கஞ்சேரி சாலை, மேடவாக்கம் மாம்பாக்கம் சாலை, வானகரம் அம்பத்தூர் புழல் சாலை ஆகிய சாலைகளில் மேற்கொண்டு வரும் சாலை வெட்டு மற்றும் சீரமைப்புப்பணிகள் நடந்து வருகின்றன.
( இனி ஸ்மூத்தா போகலாம்.. சென்னை சாலைகள் அடியோடு மாறுது.. அரசு எடுத்த ஸ்மார்ட் முடிவு.. நல்ல செய்தி! )
பாலங்கள் கருவிகள்: இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னையில் இருக்கும் சுரங்க பாலங்கள் உள்ளிட்ட பல இடங்களில் திடீரென எச்சரிக்கை அளிக்கும் அளவீடு ஒன்று பொருத்தப்பட்டு உள்ளது. மொத்தம் 44 இடங்களில் இந்த எச்சரிக்கை குறியீடூ பொருத்தப்பட்டு உள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி, வடகிழக்கு பருவமழை காலத்தில் வெள்ளம் தணிக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நகரம் முழுவதும் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் எச்சரிக்கை சிக்னல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சுரங்க பாதைகள், பாலங்களின் கீழ் பகுதிகள், ஆற்று முகத்துவரங்கள் என்று 44 இடங்களில் மொத்தமாக இந்த எச்சரிக்கை சிக்னல் பொருத்தப்பட்டு உள்ளது. இது ஸ்கேல் போன்ற அமைப்பு ஆகும். அதாவது சுரங்க பாலத்தின் இரண்டு பக்கமும் இந்த ஸ்கேல் இருக்கும். அதில் ஒரு அடி, இரண்டு அடி என்று குறியீடுகள் இருக்கும்.

வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் தண்ணீர் எவ்வளவு வருகிறது என்பதை கணக்கிட இந்த குறியீடு உள்ளது. இதில் சுரங்க பாதையில் உள்ள 22 எச்சரிக்கை சிக்னலில் 16 மாநகராட்சியாலும், ஆறு நெடுஞ்சாலைத் துறையாலும் பராமரிக்கப்படும். இந்த அமைப்பு சுரங்கப்பாதைகளில் உள்ள தண்ணீரின் அளவு குறித்து வாகன ஓட்டிகளை எச்சரிக்கும். மழைநீர் மேல்புறம் வரை சென்றால், அதாவது அதிக அளவை அடைந்தால் சிவப்பு விளக்கு எரியும்.
மிதமான அளவு தண்ணீர் இருந்தால் வாகனங்கள் மெதுவாக செல்ல மஞ்சள் விளக்கு எரியும். பச்சை விளக்கு எறிந்தால் வாகன ஓட்டிகள் எளிதாக செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.. இதில் வாகன ஓட்டிகள் கவனமின்றி சென்றால் அவர்களை எச்சரிக்கை விதமாக கருவிகள் பொருத்தப்படும். வாகனங்கள் சப்வே அடியில் சிக்குவதை தவிர்க்க இந்த கருவிகள் பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இங்கே வரும் காலங்களில் மின்சார மோட்டார்கள் வைக்கப்பட உள்ளன.
தண்ணீர் இங்கே உயர உயர தானாக உறிஞ்சும் விதமாக அமைப்புகள், வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications