கிளாம்பாக்கம் இருக்கட்டும்! ஏர்போர்ட் போல! முழுக்க முழுக்க ஏசியோடு வரும்.. அடுத்த பேருந்து நிலையம்
சென்னை; சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் அடுத்த பேருந்து நிலையமும் திறக்கப்பட உள்ளது. குத்தம்பாக்கத்தில் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ளது. திருமழிசை - ஸ்ரீபெரும்புதூர் நடுவில் இந்த பகுதி அமைந்துள்ளது.
கடந்த 30.12.2023 அன்று கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறந்து வைக்கப்பட்டது. சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வாக, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளை பொது மக்களின் வசதிக்கேற்ப, 30.01.2024 முதல் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில் இருந்து 90 சதவிகித அரசுப் பேருந்துகள் மற்றும் மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து 10 சதவிகிக அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அடுத்த பேருந்து நிலையம்: சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் அடுத்த பேருந்து நிலையமும் திறக்கப்பட உள்ளது. திருமழிசை - ஸ்ரீபெரும்புதூர் நடுவில் இந்த பகுதி அமைந்துள்ளது.
பூந்தமல்லி வழியாக செல்லும் வகையில் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் குத்தம்பாக்கத்தில் 136 பஸ் பேக்களுடன் 25 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்படும்போது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
வரவிருக்கும் குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தை சுற்றி போக்குவரத்து பிரச்சனை ஏற்படாமல் இருக்க கூடுதல் அணுகல் சாலைகளை அடையாளம் காணுமாறு சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தை (கும்டா) கேட்டுக் கொண்டுள்ளது.
ஜனவரியில் கட்டுமானம் முடியும் நிலையில் மார்ச் மாதம் இது செயல்பாட்டிற்கு வரும். குத்தம்பாக்கத்தில் சென்னையின் வரவிருக்கும் பேருந்து முனையம், முழுமையாக குளிரூட்டப்பட்ட மற்றும் மேற்கு நோக்கி செல்லும் பேருந்துகளுக்கு சேவை செய்யும் வசதியுடன் மார்ச் 2025க்குள் திறக்கப்படும். அதாவது கோவை உட்பட கொங்கு மண்டலம் செல்ல இந்த பேருந்து நிலையம் வசதியாக இருக்கும். கிளாம்பாக்கம் சென்றும் மேற்கு மண்டலத்திற்கு எப்போதும் போல செல்லலாம். நெரிசலை குறைக்க.. நகர விரிவாக்கம் கருதி இந்த பருந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
வளர்ச்சி: குத்தம்பாக்கம் வரை மெட்ரோ ரயிலை நீட்டிப்பது குறித்தும் கும்டா ஆய்வு செய்து வருகிறது. இந்த டெர்மினஸ் பெங்களூரு உள்ளிட்ட மேற்குப் பகுதிகளுக்கு பேருந்துகளைக் கையாளும். சிஎம்டிஏ அமைச்சர் பி கே சேகர் பாபு நடத்திய ஆய்வுக் கூட்டத்தில், குத்தம்பாக்கம் முனையத்தின் நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
திட்டப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டேன். டெர்மினஸைச் சுற்றி போக்குவரத்துப் பிரச்னையோ, தண்ணீர் தேக்கமோ ஏற்படக் கூடாது. எனவே தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டேன்"என்று அமைச்சர் சேகர் பாபு விளக்கினார்.
கிளாம்பாக்கம் டெர்மினஸை முடிப்பதில் அனைவரது கவனமும் செலுத்தப்பட்டதால், இந்த ஆண்டின் நடுப்பகுதியில் செயல்படத் திட்டமிடப்பட்ட பேருந்து நிறுத்தம் தாமதமானது. தற்போது இதற்கான பணிகள் முழுவீச்சில் தொடங்கியுள்ள நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திறக்கப்படும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். பிரதான கட்டிடம் முழுவதுமாக குளிரூட்டப்பட்டதாகவும், போட கோர்டை உள்ளடக்கியதாகவும் இருக்கும்.
25 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த டெர்மினஸ், கிருஷ்ணகிரி, பெங்களூரு போன்ற மேற்குப் பகுதிகளுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகளுக்கு 70 பேகளும், தனியார் சேவைகளுக்காக 30 பேக்களும், எம்டிசி பேருந்துகளுக்கு 36 பேக்களும் இருக்கும். "ஓட்டுனர்கள், தங்குமிடங்கள் மற்றும் கடைகளுக்கான ஓய்வு பகுதிகள் தனியாக இருக்கும். . 1,600க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், 200 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் எஸ்கலேட்டர்கள், குடிநீர் வசதிகள், கழிவுநீர் ஆலை மற்றும் சிசிடிவி கேமராக்கள் போன்ற வசதிகளை உள்ளடக்கிய மல்டி லெவல் பார்க்கிங் வசதியும் இதில் இருக்கும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications