தலைக்கேறிய விபச்சாரம்! சென்னை வளசரவாக்கம் வீட்டில் "பெரியவர்"! இனி சிறுமிகளை சீண்டினால்! சீறுது பாஜக
சென்னை: சிறு குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இந்த கொடூர குற்றம் மன்னிக்க முடியாதது என்றும் அந்த நபர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் தமிழக பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை, வளசரவாக்கத்தில் ஜெய்நகர் 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில், பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து 2 நாட்களுக்கு முன்பு, விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் அந்த வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தினர்.

அப்போது பிளஸ்-2 படிக்கும் பள்ளி மாணவிகள் சிலர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதை பார்த்து போலீசார் அதிர்ந்து போனார்கள். அதுமட்டுமல்ல, 17 வயது மாணவியிடம் உல்லாசம் அனுபவிக்க வந்த சென்னை மேற்கு சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரும் சிக்கினார். இந்த தாத்தாவுக்கு 75 வயதாகிறது.
புரோக்கர்கள்: இதையடுத்து, பெண் புரோக்கர், அவரது உறவினர்கள், 17, 18 வயதே ஆன 2 இளம்பெண்கள் உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர்.. விசாரணையும் ஆரம்பமானது..
இதில், பெண் புரோக்கர், 12ம் வகுப்பு படிக்கும் தன்னுடைய மகள் மூலம் அவரது பள்ளி தோழிகளுக்கு வலைவீசியுள்ளார்.. பள்ளி மாணவிகளை தன்னுடைய வீட்டுக்கு வரவழைத்து அவர்களை, "பிரெயின் வாஷ்" செய்து பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார்...
லாட்ஜ்கள்: அதுமட்டுமல்லாமல், உள்ளூர் புரோக்கர்கள் மூலம் தன்னிடம் சிக்கிய சிறுமிகளை லாட்ஜுகளுக்கு அனுப்பி வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருக்கிறார்.
காமம் தலைக்கேறிய வயதானவர்கள் பலர், தங்களுக்கு சிறுமிகள் தான் வேண்டும் என்று பெண் புரோக்கரிடம் கேட்டார்களாம்.. இதுபோல கேட்டால், 17 வயதே ஆன மாணவிகளை, அவர்களுடன் அனுப்பி வைத்துவிடுவாராம்.. ஒருநாள் இரவுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை வசூலித்திருக்கிறார் இந்த பெண் புரோக்கர். இப்படி ஏகப்பட்ட மாணவிகளின் வாழ்க்கையை சிதைத்திருப்பதை கண்டு போலீசார் அதிர்ந்து போனார்கள். இன்னும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
குடும்ப வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் யார்? என்பதை நைசாக பேச்சு கொடுத்து தெரிந்து கொள்வாராம் இந்த பெண் புரோக்கர்.. உடனே அந்த மாணவிகளுக்கு உதவுவதுபோல, "பார்ட் டைம்" வேலை தந்து குடும்பத்தை காப்பாற்ற உதவி செய்வதாக சொல்வாராம்.
தாத்தா கைது: பிறகு மெல்ல மெல்ல பணத்தாசையை காட்டி, பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பாராம்.. வயதானவர்கள் முதல் ரவுடிகள் வரை இந்த பெண்களை அனுப்பி வைத்து, லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார் அந்த புரோக்கர் பெண். இப்போது 7 பேர் கைதாகி உள்ளனர்.. அந்த 75 வயது தாத்தாவும் கைது செய்யப்பட்டிருக்கிறார்... கைதானவர்களிடம் செல்போன்கள், கார், உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
ஆளுநர் மாளிகை: இப்படிப்பட்ட சூழலில், பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "ஆளுநர் மாளிகையில் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், கருக்கா வினோத்துக்கு நெருக்கமான 37 வயதான பெண்ணின் வீட்டில் என்ஐஏ சோதனையிடும் போது கண்டெடுத்த ஆவணங்களின் அடிப்படையில் அப்பெண் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததும், மேலும் பலரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து மாநில பாலியல் குற்றங்கள் தடுப்பு பிரிவுக்கு என்ஐஏ தகவல் அளித்தது.
பியூட்டிஷியன்: இந்த வழக்கின் விசாரணையில், அந்த பெண் தன் மகளின் பள்ளித் தோழிகளிடம் நெருங்கிப் பழகி, நடனம் கற்றுத்தருவதாகவும், அழகுக் கலை கற்றுத் தருவதாகவும் ஆசை காட்டி அந்த குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி சீரழித்த அவலம் வெளிப்பட்டது. குறிப்பாக, ஐதராபாத், கோவை போன்ற நகரங்களுக்கு அந்த பெண்களை அழைத்துச் சென்று கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூரம் நெஞ்சைப் பிழிகிறது.
மேலும், அந்தக் குழந்தைகளின் குடும்ப நிலைமையை தெரிந்து கொண்டு பண ஆசை காட்டியும், மறுத்தால் ஏற்கெனவே ரகசியமாக எடுக்கப்பட்ட அந்தரங்க புகைப்படங்களை பொது வெளியில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். இதுவரை 7 பேர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறு குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இந்த கொடூர குற்றம் மன்னிக்க முடியாதது.
துயரம்: அந்த நபர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும். அவசரகதியான உலகத்தில், பொருளீட்டும் நிர்ப்பந்தத்தில் இயந்திரம் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள், தங்கள் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள், யாருடன் நட்பு கொண்டிருக்கிறார்கள் என அறிந்து கொள்ளாமலும், எங்கு செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என தெரிந்து கொள்ளாமலும், அவர்களின் எதிர்காலத்தை தொலைத்து கொண்டிருப்பது பெரும் துயரம்" என தெரிவித்துள்ளார்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications