42 வயசுல விபச்சாரத்தில் விஜயலட்சுமி.. சென்னை வளசரவாக்கம் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்.. யாரந்த பெண்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் முறைகேடாக செயல்பட்டு வரும் மசாஜ் சென்டர்கள், போலியாக செயல்பட்டு வரும் ஸ்பா, சலூன்களில் விபச்சாரம் செய்யப்படுவதாக போலீசாருக்கு அவ்வப்போது ரகசிய தகவல்கள் வருகின்றன.. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அதிரடி சோதனைகளை அவ்வப்போது தொடர்ந்து மேற்கொண்டும் வருகிறார்கள்.. அந்தவகையில், வளசரவாக்கம் வீட்டிலும் விபச்சாரம் நடந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் பாலியல் குற்றச்சாட்டுகள் பெருகி வருகின்றன.. வீடுகளிலும், அப்பார்ட்மென்ட்களிலும் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு வரும் ரகசிய தகவல்களின் அடிப்படையில், அதிரடி சோதனைகள் செய்யப்படுகின்றன.. தகவல்கள் உண்மையாக இருக்கும்பட்சத்தில், ஆன் தி ஸ்பாட்டில் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

Chennai prostitution Valasaravakkam

பெருகும் போலி மசாஜ் சென்டர்கள்

அதேபோல, முறையான அனுமதி இல்லாமல், அல்லது அனுமதி பெற்றும், லைசென்ஸ்களை புதுப்பிக்காமல், செயல்பட்டு வரும் ஸ்பா சலூன்களிலும், விபச்சாரம் நடப்பதாக கூறப்படுகிறது.

எனவே, இதுபோன்ற ஸ்பா சலூன்கள், மசாஜ் சென்டர்கள், பியூட்டி பார்லர்களிலும் போலீசார், நேரடியாகவே ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதுபோன்ற இடங்களில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் அப்பாவி பெண்களை, பாதுகாப்பாக மீட்டு அரசு காப்பகங்களில் ஒப்படைத்து வருகின்றனர்.. முறைகேடாக செயல்படும் சம்பந்தப்பட்ட ஸ்பா சென்டர்களையும் இழுத்து மூடி சீல் வைத்தும் வருகின்றனர்.

அப்பார்ட்மென்ட்டில் பாலியல் தொழில்

அந்தவகையில், கடந்த 10 நாட்களுக்கு முன்புகூட, விருகம்பாக்கம் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக, போலீசாருக்கு ரகசிய கிடைத்துள்ளது.. சாய்பாபா காலனி 3வது தெருவிலுள்ள அந்த அப்பார்ட்மென்ட்டை ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதியானது. இதற்கு பிறகு பெண் போலீசார், உள்ளிட்ட தனிப்படையினர், அந்த அப்பார்ட்மென்ட்டிலிருந்த 50 வயது லதாவை கைது செய்தனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு தங்க வைத்திருந்த ஒரு பெண்ணையும் பத்திரமாக மீட்டனர்.

இந்நிலையில், சென்னை: வளசரவாக்கம் பகுதியில், ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்பேரில் சம்பந்தப்பட்ட வீட்டுக்குள் சென்றால், 42 வயது விஜயலட்சுமி விபச்சாரம் செய்வது உறுதியாகியிருக்கிறது.

வளசரவாக்கம் வீட்டில் விபச்சாரம்

இதுகுறித்து காவல்துறை அதிகாரப்பூர்வமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. அதில், "சென்னை பெருநகர காவல், விபச்சார தடுப்புப் பிரிவு-1 (Immoral Traffic Prevention Unit, ITPU-1) காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் நேற்று (11.03.2025) அன்று வளசரவாக்கம், வெங்கட சுப்பிரமணி நகர், 12 வது குறுக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்தபோது, அங்கு பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.

விஜயலட்சுமி சிக்கினார்

அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட தனிப்படை போலீசார் மேற்படி வீட்டில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்திய ஆவடி சுரேஷின் மனைவி விஜயலட்சுமி (42) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு தங்க வைத்திருந்த 1 பெண் மீட்கப்பட்டார்.

விசாரணையில் எதிரி விஜயலட்சுமி மேற்படி வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தியது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரி விஜயலட்சுமி விசாரணைக்குப் பின்னர் இன்று (12.03.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார். மீட்கப்பட்ட பெண் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+