அய்யோ காப்பாத்துங்க.. அந்தரத்தில் தவிக்க விட்ட ராட்டினம்.. அலறிய மக்கள்! விஜிபியில் விபரீதம்!
சென்னை: சென்னை ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள பிரபலமான பொழுதுபோக்கு தளமான விஜிபி பார்க்கில் ராட்சத ராட்டினத்தில் சிக்கி 3 மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதை அடுத்து நீண்ட நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் அவர்களை மீட்டனர்.
சென்னையில் முக்கிய சுற்றுலா தளங்களாக மெரினா கடற்கரை, வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பல தளங்கள் இருக்கிறது. சென்னை நகருக்கு வெளியே மக்கள் அதிக அளவில் சுற்றுலா செல்லும் பகுதியாக ஈசிஆர் சாலையில் விஜிபி இருக்கிறது.
மரைன் கிங்டம், ராட்சத ராட்டினங்கள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட விஜிபி சுற்றுலா மையத்துக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறை காரணமாக ஆயிரக்கணக்கானோர் அங்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் விடுமுறை முடிவடைய இருப்பதால் கடந்த சில நாட்களாகவே அங்கு மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் இன்று மாலை சுமார் 6 மணி அளவில் ராட்சத ராட்டினம் ஒன்றின் மேல் 30க்கும் மேற்பட்டோர் சவாரி செய்தனர். அப்போது திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்தரத்தில் ராட்டினம் நின்றது. சிறிது நேரத்தில் சரியாகும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்படவில்லை.
இதனால் குழந்தைகள் உள்ளிட்டோர் அச்சமடைந்து சத்தமிட தொடங்கினர். மேலும் அந்தரத்தில் நின்றதால் பெண்களும் குழந்தைகளும் அச்சமடைந்து அலறியதோடு, ஒரு சிலருக்கு மயக்கமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 9 மணி ஆகியும் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்படாமல் அவர்கள் ராட்டினத்திலேயே தவித்தனர். இந்த நிலையில் பொதுமக்கள் ரத்தினத்தில் சிக்கிக் கொண்டது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள் விஜிபிக்கு விரைந்தனர்.
தொடர்ந்து அவர்களை மீட்கும் பணியும் நடைபெற்றது. இந்த நிலையில் ராட்டினத்தை முறையாக பராமரிக்காமல் இயக்கியதன் காரணமாகவே சுற்றுலாப் பயணிகள் அந்தரத்தில் தவிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. அதே நேரத்தில் இது தொடர்பாக விஜிபி எந்த விதமான விளக்கத்தையும் அளிக்கவில்லை. ஏற்கனவே ஒரு சில முறை இதே போல ராட்டினங்களால் மக்கள் அந்தரத்தில் தவித்த சம்பவம் நடைபெற்றிருக்கும் நிலையில், உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் பொதுமக்கள்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்!












Click it and Unblock the Notifications