வீடியோ காலில் கேவலம்.. தம்பதி தேனாய் பேசியதுமே கரைந்து விழுந்த சரண்யா.. சென்னையில் இப்படியும் கொடுமை
சென்னை: இளம் பெண்கள் தனித்து வாழ்வது என்பது மிக சவாலான விஷயமாக உள்ளது.. அதிலும், கணவனை இழந்த பெண்கள், சமூகத்தில் இன்றைய சூழலில் பல்வேறு பிரச்சனைகளை சமாளித்து வாழ வேண்டியிருக்கிறது.. துணையில்லாத பெண்கள் எளிதில் ஏமாற்றப்படும் நிகழ்வுகளும், ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.. இதோ தமிழகத்தின் தலைநகரிலும் ஒரு கொடுமை நடந்துள்ளது.
சென்னை எண்ணூர் முகத்துவாரகுப்பம் பகுதியை சேர்ந்த மீனவர் சதீஷ்.. 33 வயதாகிறது.. இவரது மனைவி சரண்யாவுக்கு 30 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.. சில வருடங்களுக்கு முன்பு, விபத்து ஒன்றில் சதீஷ் இறந்துவிட்டார்.

காப்பீட்டு பணம்
எனவே, விபத்து காப்பீட்டில் வந்த தொகையை வைத்து, சரண்யா தன்னுடைய குடும்பத்தை கவனித்து வந்துள்ளார்.. இதைத்தவிர, குடும்ப செலவுக்கு துணி வியாபாரமும் செய்து வந்திருக்கிறார்.. அப்போதுதான், அந்த பகுதியில் வசித்து வந்த காந்திகுமார் (35), சத்தியராணி (33) தம்பதியுடன் சரண்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கத்தின் அடிப்படையில், சரண்யாவிடமிருந்து சத்தியராணி கொஞ்சம், கொஞ்சமாக 10 லட்சம் வரை வாங்கியிருக்கிறார்.. அத்துடன், இந்த பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி வந்துள்ளார்.. சத்தியராணியிடம் பணம் தராததால், அவரது கணவர் காந்திகுமாரிடம் சென்று சரண்யா, தன்னுடைய பணத்தை தருமாறு கேட்டுள்ளார்.
அன்பாக பேசிய காந்திகுமார்
அதற்கு காந்திகுமார், "என் மனைவியிடம் பணம் கேட்க வேண்டாம், உனக்கு நானே தந்துவிடுகிறேன்" என்று சொன்னாராம்.. இதையும் சரண்யா நம்பியிருக்கிறார்.. பிறகு மீண்டும் பணம் விஷயமாக காந்திகுமாரிடம் சரண்யா கேட்டுள்ளார்.. அப்போது திடீரென சரண்யாவுக்கு வீடியோ கால் செய்து, அன்பாக பேசியிருக்கிறார் காந்திகுமார்.. மேலும், சரண்யாவை தன்னுடைய வலையில் வீழ்த்தவும் முயன்றுள்ளார்.
திடீரென காந்திகுமாரின் பேச்சில் வித்தியாசம் தெரியவும், சுதாரித்துக் கொண்ட சரண்யா, "இனிமேல் எனக்கு அடிக்கடி போன் செய்ய வேண்டாம், பணத்தை மட்டும் கொடுங்கள்.. பணத்தை நீங்கள் தராவிட்டால் போலீசில் புகார் செய்வேன்" என்று கடுமையாக கூறியிருக்கிறார்.
துணிந்த சரண்யா
அதற்கு காந்திகுமார், ஏற்கனவே சரண்யாவுடன் வீடியோ காலில் பேசிய ஸ்கிரின்ஷாட்களை சரண்யாவிடம் காட்டி, "மீண்டும் பணத்தை கேட்டால், இந்த போட்டோவை சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு, நம் இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக சொல்லி அசிங்கப்படுத்திவிடுவேன்" என்று மிரட்டியிருக்கிறார்.
இதைக்கேட்டு அதிர்ந்த சரண்யா, இதற்கு மேலும் பொறுக்க முடியாமல், எண்ணூர் மகளிர் போலீசில் புகார் தந்துவிட்டார்.. இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி காந்திகுமார், சத்தியராணி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து, கைது செய்தனர். இப்போது இந்த ஜோடி புழலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications