ஏகப்பட்ட விதி மீறல்.. அந்த பக்கமே போக முடியலையே! சென்னையில் பிரபல மாலை சீல் வைக்க போறாங்களா? பின்னணி
சென்னை: சென்னையில் உள்ள பிரபல மாலான விஆர் மால் விதி மீறல்களில் ஈடுபட்டு உள்ளதாக சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக விஆர் மால் நிர்வாகத்திற்கு சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. VR மால் மற்றும் ஓசோன் ப்ரொஜெக்ட்ஸ் உரிமையாளருக்கு CMDA மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அங்கே இருக்கும் அதிகாரபூர்வமற்ற, விதிமீறல் செய்யப்பட்ட கட்டிட பகுதிகளை பயன்படுத்த கூடாது, அதை உடனே கைவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

நோட்டீஸ் அனுப்பப்பட்ட 30 நாட்களுக்குள் அதை கைவிட வேண்டும். இல்லையென்றால் கட்டிடம் மொத்தமாக இடிக்கப்படும், சீல் வைக்கப்படும் என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டு உள்ளது.
குறிப்பிட்ட காலத்திற்குள் உரிமையாளர் அல்லது குடியிருப்பாளர் அந்த கட்டிடத்தின் பயன்பாட்டை நிறுத்தவில்லை என்றால், சட்ட பிரிவு 56 இன் துணைப்பிரிவு (2-A) இன் கீழ் பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த சட்டப்படி வளாகத்தை பூட்டி சீல் வைப்பதன் பணிகள் தொடங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர் அன்ஷுல் மிஸ்ரா இந்த நோட்டீசை அனுப்பியுள்ளார்.
போக்குவரத்து காவல் துறை கூடுதல் ஆணையர் மற்றும் நகர காவல் துறையினர் பீக் ஹவர் நேரத்தில் வணிக வளாகத்தின் முன் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துவது குறித்து புகார் அளித்துள்ளனர். அந்த பக்கம் வாகனங்கள் போகவே முடியவில்லை.
அங்கே மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ளது. இதை பற்றி விசாரிக்க வேண்டும். அவர்கள் விதியை மீறி உள்ளனர். முக்கியமாக பார்க்கிங் விதிகளை மீறி உள்ளனர் என்று புகார் அளித்து உள்ளனர். இந்த புகாரை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில்தான் அங்கே ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
சோதனையின் போது, வணிக வளாகத்தின் தென்கிழக்கு பகுதியில் விதி மீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. முன் பகுதியில் உள்ள இடத்தில் 30 திறந்தவெளி கடைகள் அல்லது ஸ்டால்கள் கொண்ட ஒரு தற்காலிக டென்ட் அமைக்கப்பட்டு உள்ளது. இது விதி மீறல் ஆக்கிரமிப்பு ஆகும்.
இதேபோல், நான்காவது மாடியில், அனுமதியின்றி இரண்டு நீச்சல் குளங்கள் கட்டப்பட்டுள்ளன. நான்காவது விளையாட்டு தளம் அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தில் இடம்பெறாத மொட்டை மாடியில் ஒரு திறந்தவெளி தியேட்டர் உள்ளது.
இது எல்லாம் விதி மீறி கட்டப்பட்டு உள்ளது. மேலும்

வணிக வளாகத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில் பகுதி ஜவஹர்லால் நேரு சாலையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. அங்கே இவர்கள் அமைத்து உள்ள வாகன சோதனைச் சாவடி காரணமாக, வணிக வளாகத்தின் முன் கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ளது.
ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தில் காட்டப்பட்டுள்ள மற்ற நுழைவு வாயில்கள் பயன்படுத்தப்படவில்லை. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க வாகனங்கள் எளிதாக செல்ல வழி இருந்தும் கூட அவர்கள் இதை பயன்படுத்தப்படவில்லை. இதனால் அங்கே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து அங்கே இருக்கும் அதிகாரபூர்வமற்ற, விதிமீறல் செய்யப்பட்ட கட்டிட பகுதிகளை பயன்படுத்த கூடாது, அதை உடனே கைவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
நோட்டீஸ் அனுப்பப்பட்ட 30 நாட்களுக்குள் அதை கைவிட வேண்டும். இல்லையென்றால் கட்டிடம் மொத்தமாக இடிக்கப்படும், சீல் வைக்கப்படும் என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டு உள்ளது.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications