Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரெட்ஹில்ஸ்.. சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம்.. சென்னையின் தாகத்தை தீர்க்கும் ஏரிகள்.. 86% நிரம்பின

சென்னைக்கு குடிநீர் வழங்கல் ஏரிகள் நிரம்பி வழிகின்றன

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக திகழும் முக்கிய ஏரிகள் 86 சதவீதத்துக்கு நிரம்பிவிட்டன என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது... சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது..

அதிலும் சென்னைவாசிகள் இந்த மழையை கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை.. கடந்த 2 நாட்களாகவே கனமழை பொழிந்து வரும் நிலையில், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது.

 திருவள்ளூர்

திருவள்ளூர்

வடசென்னை வெள்ள நீரில் மிதக்கிறது.. சாலை, ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.. சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளன... திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 58 ஏரிகளும் 100 சதவீதம் நிரம்பிவிட்டன.. மேலும் 37 ஏரிகள் 76 சதவிகிதமும், 50 ஏரிகள் 51 சதவிகிதமும், 107 ஏரிகள் 50 சதவிகிதமும், 79 ஏரிகள் 25 சதவிகிதமும் நிரம்பியிள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்தார்.

நீர்மட்டம்

நீர்மட்டம்

அதேபோல, பூண்டி நீர்தேக்கத்தில் மொத்த உயரமான 35 அடியில் இப்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நீர்மட்டம் 33.98 அடியாக உயர்ந்துள்ளது... நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 244 கன அடியாக உள்ள நிலையில், 4,883 கனஅடி நீர் திறந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகளில் 138 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டிவிட்டது.. 88 ஏரிகள் 70 சதவீதத்துக்கு மேலும் 48 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும் நிரம்பி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உபரிநீர்

உபரிநீர்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவான 23.3 அடி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. நீர்வரத்து விநாடிக்கு 710 கன அடியாக உள்ள நிலையில், ஏரியிலிருந்து வினாடிக்கு 2,144 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரி, அதன் மொத்த உயரமான 21 .20 அடியில், தற்போது 19.52 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

Recommended Video

    Tamilnadu-ல் மழைக்கான அச்சுறுத்தல் இருக்கு - Tamilnadu Weatherman
    நீர்வரத்து

    நீர்வரத்து

    மொத்த கொள்ளளவான 3 ஆயிரத்து 300 மில்லியன் கனஅடி நீரில், தற்போது 2 ஆயிரத்து 916 கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு ஆயிரத்து 357 கனஅடியாக உள்ள நிலையில், 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியில், அதன் மொத்த உயரமான 18.86 அடியில் தற்போது, 18 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 520 கன அடியாக உள்ள நிலையில், ஆயிரத்து 200 கனஅடி நீர் திறந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

     கொள்ளளவு

    கொள்ளளவு

    மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவான 23 .3 அடியை எட்டியது. நீர்வரத்து வினாடிக்கு 500 கன அடியாக உள்ள நிலையில், அவை முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது... இந்நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள் 84 சதவீதம் நிரம்பிவிட்டதாக கூறப்படுகிறது.. அதுமட்டுமல்ல, கடந்த வருடம் பெய்த மழையால் ஏரிகள் நிரம்பியதைவிட இந்த முறை அதிக அளவு நிரம்பியதாக புள்ளிவிரம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

    செம்பரம்பாக்கம்

    செம்பரம்பாக்கம்

    அதன்படி, கடந்த வருடத்தைவிட இந்த முறை 54 சதவீதம் ஏரிகள் நிரம்பி உள்ளதாக ஒப்பிடப்பட்டுள்ளது.. செம்பரம்பாக்கம் ஏரியில் இன்றைய தினம் 81 சதவீதம் அளவுக்கு நீர் நிரம்பிய நிலையில், கடந்த வருடம் 67 சதவீதம் மட்டுமே நிரம்பி உள்ளது.. அதேபோல பூண்டி ஏரியில் 86 சதவீதம் நீர் நிரம்பிவிட்ட நிலையில், கடந்த வருடம் இதில் பாதியாக அதாவது 45 சதவீதம் மட்டுமே ஏரிகள் நிரம்பியிருந்தன.

    ஏரிகள்

    ஏரிகள்

    அதேபோல ரெட்ஹில்ஸ் ஏரியில் இன்று 88 சதவீதம் ஏரிகள் நிரம்பி வழியும் நிலையில் கடந்த வருடம் 68 சதவீதம் அளவுக்கு ஏரி நிரம்பி இருக்கிறது.. சோழவரம் ஏரியை பொறுத்தவரை 84 சதவீதம் ஏரி நிரம்பி இருக்கிறது.. ஆனால் கடந்த வருடம் இது வெறும் 13 சதவீதம் மட்டுமே.. ஆக, கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக திகழும் ஏரிகள் 86 சதவீதத்துக்கு நிரம்பிவிட்டன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+