காதலன் வீட்டில் ரகளை..விசாரணைக்கு போன போலீஸ் கையை கடித்து பெண் அட்டகாசம்..சென்னையில் அதிர்ச்சி
சென்னை: காதலன் வீட்டில் தகராறு செய்த பெண் விசாரணைக்கு சென்ற போலீசின் சட்டையை கிழித்து கையை கடித்து வைத்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காவலரின் கையை கடித்து வைத்த பெண்ணின் பெயர் செல்வி என்பதாகும். புதுவண்ணாரப்பேட்டை பூணடிதங்கமாள் தெரு பகுதியில் வசித்து வருகிறார். இவர் வடசென்னை திருவொற்றியூர் எஸ் பி கோவில் பகுதியில் வசித்து வரும் தேவேந்திரனை காதலித்தார்.
தனியார் வங்கி ஊழியரான தேவேந்திரனும் செல்வியும் கடந்த வருடமாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17 அன்று இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

பணம் கேட்டு தொந்தரவு
இந்நிலையில் மணமகன் வீட்டாரிடம் திருமணத்திற்கு முன்பே மணமகள் செல்வி 5 சவரன் நகை இரு சக்கரவாகனம் ஒருலட்ச ருபாய் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் திருமண நிச்சயத்தை தேவேந்திரன் குடும்பத்தினர் ரத்து செய்து விட்டனர். இதனால் விரக்தியடைந்த செல்வி அவ்வப்போது தேவேந்திரன் வீட்டிற்கு வந்து தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

ரகளை செய்த செல்வி
இந்நிலையில் நேற்று மாலை காதலன் வீட்டிற்கு சென்று காதலன் இல்லாத சமயத்தில் தேவேந்திரனின் பெற்றோரிடம் சண்டையிட்டு தகாத ஆபாச வார்த்தைகளில் பேசி தாக்க முற்பட்டுள்ளார். இதனால் தேவேந்திரனின் தாயார் ரேனுகா காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.

கையை பிடித்து கடித்த செல்வி
சம்பவ இடத்திற்கு திருவொற்றியூர் காவல் நிலைய தலைமை காவலர் சரவணன் சென்ற நிலையில் தடுக்க முற்பட்டுள்ளார். அதற்கும் கட்டுப்படாத செல்வி கத்தி கூச்சல் போட்டதாக தெரிகிறது. அதை செல்போனில் படம் பிடித்த தலைமை காவலரை வலது கையை பிடித்து கடித்துள்ளார் மேலும் தலைமை காவலர் சரவணனின் சட்டையை பிடித்து கிழித்துள்ளார்.

இளம் பெண் கைது
இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன் திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கவே திருவொற்றாயூர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ருக்மணி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவல் நிலையம் அழைத்து சென்றார். பின்னர் கொலைமிரட்டல் விடுத்தல்,அத்துமீறி உள்ளே நுழைதல், தகாத வார்த்தைகளில் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் போன்ற ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். திருமணம் நின்ற விரக்தியில் பெண் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று சண்டையிட்டதும் தடுக்க சென்ற காவலரின் கையை பிடித்து கடித்துவிட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications