Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏ சான்றிதழ் பெற்ற விடுதலை! "குழந்தையுடன் பார்த்தே தீருவேன்.." அடம்பிடித்த பெண்! ரூல்ஸ் என்ன தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று ரோகிணி திரையரங்கில் நரிக்குறவ மக்களை உள்ளே அனுமதிக்காதது சர்ச்சையானது. இதற்கிடையே இன்று விடுதலை படத்திற்குக் குழந்தையுடன் வந்த பெண்ணை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக வந்த திரைப்படம் அசுரன். இந் படம் மிகப் பெரியளவில் வெற்றி பெற்றது. இதற்கு அடுத்து, காமெடி நடிகர் சூரியை நாயகனாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படம் நேற்றைய தினம் வெளியானது. இப்போது வரை இந்தப் படத்திற்கு மிகவும் பாசிட்டிவான விமர்சனமே கிடைத்து வருகிறது. பலரும் படத்தைப் பார்க்க ஆர்வமாக தியேட்டர் வருகிறார்கள்.

விடுதலை

விடுதலை

விடுதலை படம் வன்முறை காட்சிகள் அதிகம் இருக்கும் திரைப்படமாகும். இதற்குத் தணிக்கை குழு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். அதாவது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே படத்தைப் பார்க்க வேண்டும் என்பதே இதன் விளக்கம். இதற்கிடையே சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரபல திரையரங்கில் விடுதலை திரையிடலின் போது, நேற்றைய தினம் பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

பரபரப்பு

பரபரப்பு

அதாவது நேற்று விருகம்பாக்கம் தியேட்டரில், பெண் ஒருவர் விடுதலை படம் பார்க்கக் குழந்தையுடன் வந்துள்ளார். இருப்பினும், ஏ சான்றிதழ் கொண்ட படம் என்பதால், தியேட்டர் ஊழியர்கள் குழந்தையைப் படம் பார்க்க அனுமதிக்க முடியாது என்று மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளார். மேலும், அவர்களுடன் சண்டை போட்டுக் கொண்டு குழந்தையை உள்ளே கூட்டிச் சென்றுள்ளார்.

 குழந்தையுடன் வந்த பெண்

குழந்தையுடன் வந்த பெண்

இதனால் அந்த ஊழியர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த பெண்ணிடம் குழந்தை இந்த படத்தைப் பார்க்க முடியாது என்பதால் தியேட்டரில் இருந்து வெளியேறுமாறு கூறியுள்ளனர். இருப்பினும், அந்த பெண் கேட்பதாக இல்லை.. போலீசாரிடம் தொடர்ந்து அந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் படம் திரையிடுவது தொடங்க கொஞ்ச நேரம் காலதாமதம் ஏற்பட்டது.

 எங்களுக்கு தெரியும்

எங்களுக்கு தெரியும்

தியேட்டரில் அந்த பெண் போலீசாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். போலீசாரிடம் அந்த பெண், "அரைகுறை ஆடையுடன் பெண்களை ஆட வைக்கும் படங்களை குடும்பத்துடன் பார்க்கலாம். ஆனால், மக்களின் வலியைப் பேசும் படத்தை குடும்பத்துடன் பார்க்கக் கூடாதா... இதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. எங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு என்ன காட்ட வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாதா... அதை நீங்கள் முடிவு செய்யக் கூடாது.

 நீங்க யாரு

நீங்க யாரு

நேற்று ரோகிணி தியேட்டரிலும் இது தான் நடந்தது. தியேட்டரிலும் சாதிய தீண்டாமை இருக்கிறது. இதன் காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. இதை எல்லாம் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது. நீங்கள் சும்மா இருந்திருந்தால்.. நாங்கள் படத்தைப் பார்த்துக் கொண்டு அமைதியாகச் சென்றிருப்போம். எனது குழந்தைகள் படம் பார்க்கக் கூடாது என்று நீங்கள் எப்படி முடிவு செய்வீர்கள். யாரும் வெளியே செல்ல மாட்டார்கள். மற்ற எந்தப் படங்களிலும் வன்முறை காட்சிகள் இல்லையா.. எல்லா படத்திலும் தான் வன்முறை இருக்கு.

மக்கள் வலியைப் பேசும் படம்

மக்கள் வலியைப் பேசும் படம்

அறைகுறை ஆடைகளுடன் பெண்களைக் காட்டும் படத்திற்கு எல்லாம் குழந்தைகளுடன் செல்லலாம் என்கிறார்கள். ஆனால், மக்களின் வலியைச் சொல்லும் படங்களை குடும்பத்துடன் பார்க்கக் கூடாது என்கிறார்கள். அதுதான் உங்கள் பிரச்சினையா.. பெண்களை அசிங்கமாகக் காட்டும் எதாவது ஒரு படத்திற்கு வந்துள்ளீர்களா இப்படி.. தயவு செய்து வெளியே செல்லுங்கள்" என்றெல்லாம் கூறினார். அப்போது சப்போர்ட்டு வரும் மற்ற சிலரும், "இது அடல்ட் படம் இல்லை சார். வன்முறை தான் இதனால் அனுமதிக்கலாம்" என்று கூறுகின்றனர்.

விமர்சனம்

விமர்சனம்

அதீத வன்முறை காட்சிகளைப் பார்த்தால் குழந்தைகள் பாதிக்கும் என்பதாலே ஏ சான்றிதழ் வழங்குகிறார்கள். படங்களுக்குச் சரியான சான்றிதழ்கள் வழங்கப்படுவதில்லை என்ற விமர்சனம் நீண்ட காலமாகவே இருக்கிறது. ஆனால், அதற்காக இப்படி ஏ சான்றிதழ் படத்தைக் குழந்தையும் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த பெண் சொல்வரை ஏற்க முடியாது என்றும் பலரும் விமர்சித்துள்ளனர்.

 ரூல்ஸ் என்ன

ரூல்ஸ் என்ன

அது சரி, தணிக்கை துறை இந்தியாவில் திரைப்படங்களுக்குத் தரும் சான்றிதழ் என்ன அதற்கு என்ன அர்த்தம் என்பதைப் பார்க்கலாம். முதலில் யு சான்றிதழ் படம். இதை அனைவரும் பார்க்கலாம்.. அடுத்து யு/ஏ 12 வயதுக்குக் குறைவான குழந்தைகள் பெரியவர்கள் துணையுடன் பார்க்கலாம். ஏ சான்றிதழ் திரைப்படம் என்றால் நிச்சயம் 18 வயதுக்கு மேலானவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும்.

 ஏ சான்றிதழ் திரைப்படம்

ஏ சான்றிதழ் திரைப்படம்

ஏ சான்றிதழ் திரைப்படம் என்றால் நிச்சயம் 18 வயதுக்கு மேலானவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும். விதிகள் இப்படித் தெளிவாக இருக்கும் போது, இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. நம்ம ஊரில் திரைப்பட சான்றிதழ் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்பதையே இது காட்டுகிறது. நேற்று கூட ரோகிணி திரையரங்கில் நரிக்குறவ இன மக்களை பத்து தல படத்திற்கு தியேட்டர் ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. இந்த விவகாரம் சர்ச்சையான போது, பத்து தல யு/ஏ சான்றிதழ் என்பதால் குழந்தைகளுடன் வந்தவர்களை அனுமதிக்கவில்லை என்று சம்பந்தமே இல்லாத விளக்கம் கொடுத்து மேலும் மாட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஏ சான்றிதழ் திரைப்படம்

ஏ சான்றிதழ் திரைப்படம்

விதிகள் இப்படித் தெளிவாக இருக்கும் போது, இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. நம்ம ஊரில் திரைப்பட சான்றிதழ் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்பதையே இது காட்டுகிறது. நேற்று கூட ரோகிணி திரையரங்கில் நரிக்குறவ இன மக்களை பத்து தல படத்திற்கு தியேட்டர் ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. இந்த விவகாரம் சர்ச்சையான போது, பத்து தல யு/ஏ சான்றிதழ் என்பதால் குழந்தைகளுடன் வந்தவர்களை அனுமதிக்கவில்லை என்று சம்பந்தமே இல்லாத விளக்கம் கொடுத்து மேலும் மாட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+