வரதட்சணை கொடுமை... 2வயது பிள்ளையை தவிக்க விட்டு தீக்கு இரையான இளம்பெண்!
Recommended Video

சென்னை : மாமியார் வரதட்சணை கொடுமை செய்ததால் 2 வயது குழந்தையை தவிக்க விட்டுவிட்டு இளம்பெண் தீக்குளித்து உயிரிழந்துள்ளார். இளம்பெண்ணின் உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று பெண் வீட்டார் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நீலாங்கரையை அடுத்த வெட்டுவாங்கேணியை சேர்ந்தவர்கள் நந்த குமார். 3 ஆண்டுகளுக்கு முன்பு பீட்சா கடையில் வேலைபார்த்த போது இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். சீர்காழியை சேர்ந்த அருள்பிரியா காதலித்து திருமணம் செய்துக் கொண்டதால் அவரது பெற்றோர் அவரிடம் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளாமல் இருந்துள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு நந்தகுமார் சரிவர வேலைக்கு போகாததால் அருள்பிரியா குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு வேலைக்கும் சென்று வந்துள்ளார். இந்நிலையில் நகை எதுவும் போடாமல் வந்துவிட்டதாகவும் குழந்தைக்கும் அருள்பிரியா வீட்டார் எந்த நகையும் போடவில்லை என்று நந்தகுமாரின் தாயார் கொடுமை படுத்தியுள்ளார்.
இதனால் மனமுடைந்த அருள்பிரியா உடலில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருள்பிரியாவின் அலறல் சத்தம் கேட்டு அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கே.எம்.சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி அருள்பிரியா உயிரிழந்தார்.
இதனையடுத்து மாமியார் கொடுமையால் தான் மகள் அருள் பிரியா தற்கொலை செய்து கொண்டதாக பெண்வீட்டார் போலீசில் புகார் அளித்துள்ளனர். நீலாங்கரை போலீசார் சந்தேகத்திற்குரிய மரணமாக வழக்கு பதிவு செய்து நந்தகுமாரிடம் விசாரித்து வருகின்றனர்.
திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யபட்டுள்ளது. உயிரிழந்த அருள்பிரியாவிற்கு 2 வயது அழகான குழந்தை உள்ளது. வரதட்சணை கொடுமையால் அநியாயமாக இளம்பெண் தீக்கு இரையான நிலையில் உலகமறியா 2 வயது குழந்தை தாயை இழந்து தவித்து நிற்கிறது.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications