சினிமாவில் நடிகை.. கோடம்பாக்கம் வந்து சீரழிந்த இளம் பெண்.. ஆண் நண்பர் செய்த பகீர்.. திடுக் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை : சினிமாவில் நடிகை வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த ஆண் நண்பர் மீது நடவடிக்கை கோரி, இளம் பெண் ஒருவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் லாவண்யா (24) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து பெரிய நடிகையாக வர வேண் டும் என்ற ஆசை இருந்ததால், தனது நண்பர்கள் மூலம் சென்னைக்கு வந்துள்ளார், பின்னர், சாலிகிராமம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கி, சினிமா வாய்ப்பு தேடி வந்துள்ளார்.

நடிக்க வாய்ப்பு

நடிக்க வாய்ப்பு

அப்போது அடையாறு பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவரின் நட்பு கிடைத்தது. கணேஷ், தனக்கு தெரிந்த சினிமா இயக்குநர்களிடம் கூறி உனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருகிறேன். என கூறியுள்ளார். சினிமா மோகத்தில் இருந்த இந்து, கணேசனை நம்பி, அவருடன் பல இடங்களில் சுற்றி வந்துள்ளார்.

புகைப்படம்

புகைப்படம்

உன்னுடைய புகைப்படங்களை காண்பிக்கவேண்டும். இதனால் பல வகைகளில் உன்னை புகைப்படம் எடுக்கவேண்டும் என்று கூறி, லாவண்யாவை தனி அறையில் பல கோணங்களில் புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது, கட்டாயப்படுத்தி லாவண்யாவுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

நண்பர்களுக்கும் விருந்து

நண்பர்களுக்கும் விருந்து

அதைத்தொடர்ந்து கணேஷ் இரவு நேரங்களில் லாவண்யாவை அழைத்து சென்று சினிமா இயக்குனர்களிடம் அறிமுகம் செய்வதாக கூறி தனது நண்பர்களை இயக்குனர்கள் என்று கூறி லாவண்யாவை அறிமுகம் செய்து அவர்களுடன் பாலியல் உறவு கொள்ள வைத்ததாக கூறப்படுகிறது.

போலீசில் புகார்

போலீசில் புகார்

ஆனால் லாவண்யாவுக்கு எந்த திரைப்படங்களிலும் கணேஷ் வாய்ப்பு வாங்கித் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து லாவண்யா கணேஷிடம் கேட்டபோது அவர் முறையாக பதில் அளிக்காமல் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த லாவண்யா நேற்று முன்தினம் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணேஷ் மற்றும் அவரது நண்பர்கள் மீது பாலியல் புகார் அளித்தார்.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

அந்த புகாரின்படி நேற்று லாவண்யாவை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். விசாரணைக்கு செல்லும்போது இந்து அதிக அளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு அடையாறு மகளிர் காவல் நிலையத்திற்கு புறப்பட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவர் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதைப் பார்த்த குடியிருப்புவாசிகள் லாவண்யாவை மீட்டு விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

விசாரணை

விசாரணை

தகவல் அறிந்து வந்த போலீசார் அவர் தங்கியுள்ள அறையை சோதனை செய்தனர். அவரது படுக்கை அறையில் இருந்து லாவண்யா கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில் சினிமா ஆசையில் எனது வாழ்க்கையை சீரழித்த கணேஷ் தான் என் சாவுக்கு முழு காரணம். எனக்கும் என் குடும்பத்திற்கும் எது நேர்ந்தாலும் அதற்கு அவர் தான் காரணம் என்று எழுதப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்துவின் தற்கொலை முயற்சியை தொடர்ந்து அவர் அளித்த பாலியல் புகாரின் படி அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+