"நம்ம சென்னை.. வாழவைக்கும் சென்னை" இன்று 384-வது பிறந்த நாளுங்க.. வரலாறை தெரிஞ்சுக்கலாம் வாங்க
சென்னை: இரவு பகலாக எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கும் நமது சென்னை நகரத்துக்கு இன்று 384-வது பிறந்த நாளாகும். பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் சென்னையின் பிறந்தநாள் எப்படி உருவானது? என்ற வரலாறை இங்கே விரிவாக பார்க்கலாம்.
சென்னை போகலாம்..எப்படியாவது பிழைத்துக் கொள்ளலாம் என வெளியூர்களில் இருந்து பையை தூக்கிக் கொண்டு புறப்படும் காலம் தற்போது வரை நீண்டு கொண்டுதான் இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மட்டும் இல்லை.. வெளி மாநிலங்களில் இருந்து கூட கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம் என பல்வேறு நோக்கங்களுக்காக சென்னையை நோக்கி படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை இங்கு ஏராளாம்.

பல்வேறு கலாசார பெருமைகள், பழைமையான நகரம்.. எனபல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் நம்ம சென்னைக்கு வரும் 22 ஆம் தேதி பிறந்த தினம் ஆகும். சென்னை தனது 384 வது பிறந்த நாளை கொண்டாடும் இந்த தருணத்தில், சென்னையின் வரலாற்றை ஒருமுறை திரும்பி பார்க்கலாம் வாருங்கள்... 550 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் கோவைவை தலைமையிடமாக கொண்டு கொச்சி, கள்ளிக்கோட்டை, மயிலாப்பூர் ஆகிய துறைமுக பகுதிகளை ஆட்சி செய்து வந்தனர்.
ஆங்கிலேயர்கள் வியாபாரம்: 100 ஆண்டுகள் சர்வ வல்லமையுடன் செல்வாக்கு செலுத்தி வந்த போர்ச்சுகீசியர்களின் ஆதிக்கம் குறையத் தொடங்கியது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட டச்சுக்காரர்கள் மயிலாப்பூருக்கு தெற்கே 25 மைல் தொலைவில் இருந்த புலிக்கட் என்ற இடத்தை கைப்பற்றினார்கள். இங்கு தங்களது வியாபரத்தை விரிவுபடுத்தினர். இதற்கு இடையில், 1600- ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட கிழக்கத்திய கம்பெனியை சேர்ந்தவர்கள் மசூலிப்பட்டினத்தில் வியாபாரத்தை தொடங்கினார்கள்.
ஆங்கிலேயர்களின் வியாபாரம் செழிக்க தொடங்கியது. ஆடைகள் வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்ட ஆங்கிலேயர்கள், இங்கு ஆடைகளை விற்பனை செய்துவிட்டு, இயற்கையான பொருட்களை மலிவு விலைக்கு வாங்கி இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தனர். அந்த சமயத்தில் கிழக்கந்திய கம்பெனியின் நிர்வாகியாக இருந்த பிரான்சிஸ் டே, மயிலாப்பூரில் போர்ச்சுகீசியர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு கொழிப்பதை அறிந்து அங்கு வந்தார்.
கிழக்கிந்திய கம்பெனி: ஆங்கிலேயர்களின் நல்ல நேரமோ என்னவோ, அந்த சமயத்தில் டச்சுக்காரர்களுக்கும் போர்ச்சுகீசியர்களுக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது. இதனால், டச்சுக்காரர்களை எதிர்க்க ஆங்கிலேயர்களுடன் போர்ச்சுகீசியர்கள் இணக்கமாக சென்றனர். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய பிரான்சிஸ் டே , மதராஸ் பட்டிணத்தில் கிழக்கிந்திய கம்பெனியை விரிவுபடுத்த முடிவு செய்தார்.
இதற்கான இடத்தை தேடி வந்தார். அப்போது, கூவம் நதியும் வங்க கடலும் சங்கமிக்கும் இடம் தங்கள் வியாபாரத்திற்கு சரியாக இருக்கும் என பிரான்சிஸ் டே முடிவு செய்தார். ஆனால், இந்த இடம் பூந்தமல்லி பகுதியை ஆட்சி செய்து வந்த நாயக்கர்களுகு சொந்தமானதாக இருந்தது. ஆனால் போர்ச்சுகீசியர்கள் தலையிட்டதால், கிழக்கிந்திய கம்பெனி அமைக்க அந்த இடம் ஆங்கிலேயர்களுக்கு கிடைத்தது.
பிரான்சிஸ் டே எழுதி வாங்கிய நாள்: வங்க கடலினை ஒட்டி, அதாவது தற்போது அமைந்து இருக்கும் மெரினா கடற்கரை பகுதியில் 5 மைல் நீளம் மற்றும் 1 மைல் அகலத்திற்கும் இருந்த இடத்தை 1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி பிரான்சிஸ் டே எழுதி வாங்கினார். இதுவே சென்னையின் பிறந்த நாளாக கருதப்பட்டு கடைபிடிக்கப்படுகிறது. அந்த கணக்கின் படியே சென்னையின் 384 வது பிறந்த நாளாக 22 ஆம் தேதி கருதபப்டுகிறது.
ஆங்கிலேயர்கர்கள் இந்த இடத்தை வாங்கிய அடுத்த ஆண்டே புனித ஜார்ஜ் கோட்டையை கட்ட தொடங்கினர். 5 ஆண்டுகளாக இந்த பணி நீடித்தது. இதன்பிறகு ஆங்கிலேயர்கள் தங்கள் வணிகத்தை தொடங்கி தொடர்ந்து செய்து கொண்டு வந்த நிலையில், 50 ஆண்டுகளுக்கு பிறகு கோல்கொண்டா பகுதியை ஆட்சி செய்து வந்த முகமதிய மன்னரின் படைத்தளபதி கிழக்கிந்திய கம்பெனியை வீழுத்துவதற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து சண்டையிட்டார்.
புனித ஜார்ஜ் கோட்டை: குறிப்பாக புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றியிருந்த குடிசை வீடுகளை தீ வைத்து கொளுத்தினார். ஆனாலும் அவரால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. அந்த கால கட்டத்தில் பிரெஞ்சுகாரர்கள் வசம் இருந்த சாந்தோம் பகுதியை முகமதியர்களின் உதவியோடு டச்சுக்காரர்கள் சுற்றி வளைத்தனர். இருந்தாலும் முடிவில், டச்சுக்காரர்களுக்கே இதில் வெற்றி கிட்டியது. சாந்தோமை பிரெஞ்சுகாரர்களிடம் இருந்து கைப்பற்றினார்.
பின்னர் கர்நாடக நவாப்பாக இருந்த தாவூத் கான், ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டார். ஆனால், போருக்கு மத்தியில் ஆங்கிலேயர்கள் பேரம் பேசி தாவூத் கானை வழிக்கு கொண்டு வந்தனர். இதனால், புனித ஜார்ஜ் கோட்டையை தக்க வைத்துக் கொண்டனர். அதன்பிறகு 1746 ஆம் ஆண்டு திடீரென ஒருநாள் பிரெஞ்சு கப்பல் படை, வங்க கடலில் வந்து நின்றது. அவர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டனர்.
வெள்ளையர், கருப்பர் நகரம்: இந்த போர் ஒரு வார காலம் நீடித்தது. இந்த போர் சமயத்தில் புனித மேரி தேவாலயத்தில் தங்கள் குடும்பத்தினரை வைத்து பாதுகாத்தார்கள். இந்த போரில் பின்னடவை ஆங்கிலேயர்கள் சந்தித்தனர். இதனால், புனித ஜார்ஜ் கோட்டையை மூன்று ஆண்டுகள் பிரெஞ்சு அரசாங்கம் வைத்து இருந்தது. எனினும், ஐரோப்பாவில் செய்யப்பட்ட அக்ஸ் லா சாப்பல் உடன்படிக்கை மூலம் மீண்டும் ஆங்கிலேயர் வசம் ஆட்சி சென்றது.
இப்படி பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டாலும் புனித ஜார்ஜ் கோட்டையை ஆங்கிலயர்கள் கெட்டியாக பிடித்துக் கொண்டனர். நாளடைவில் புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றியுள நகரங்கள், வளர்ச்சி அடைந்து நகரமாக மாறியது. ஆங்கிலேயர்கள் வசித்து வந்த பகுதி வெள்ளையர் நகரம் என்றும் தமிழர்கள், தெலுங்கர்கள் வசித்த பகுதி கருப்பர் நகரம் எனவும் அழைக்கப்பட்டது. வெள்ளையர் நகரத்தில் தான் புனித ஜார்ஜ் கோட்டை இருந்தது.
கிண்டி கவர்னர் மாளிகை: 1749-ம் ஆண்டு பிரெஞ்சு படைகளால் மதராஸ் பட்டணம் கைப்பற்றப்பட்டது. ஆனாலும் ஐரோப்பாவில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சு காரர்களுக்கும் இடையே ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது. இதன்படி ஆங்கிலேயரிடமே மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. திப்பு சுல்தான் மறைவுக்கு பிறகு மதராசப்பட்டினத்தில் பெரிய அளவில் பிரச்சினை ஏற்படவில்லை.
அதன்பிறகு அமைதியே நிலவியது. அதன்பிறகு மதராசின் வளர்ச்சியில் பல்வேறு நடவடிக்கைகளை கிளைவ் மேற்கொண்டர். கவர்னர்கள் தங்குவதற்காக கிண்டியில் இரண்டாவது அரசு இல்லம் கட்டமைக்கப்பட்டது. 19 வது நூற்றாண்டில் மீண்டும் கவர்னர் எல்பின்ஸ்டன் பிரபு மீண்டும் விரிவாக்கம் செய்தார். தற்போது கிண்டியில் இருக்கும் கவர்னர் மாளிகை இதுதான்.
சென்னை பெயர் எப்படி?: இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு ஆங்கிலேயர்கள் மூட்டை முடிச்சுகளுடன் தங்கள் நாட்டிற்கு புறப்பட்டு சென்றனர். அதன்பிறகு மதராசப்பட்டினம் சென்னையாக பெயர் மாறியது. பெயர் மட்டும் அல்ல நகரமும் அசுர வளர்ச்சி கண்டது. வானுயர்ந்த கட்டிடங்களும் மக்கள் தொகை பெருக்கமும் அதிகரிக்க தொடங்கியது.
ஆசியான் டெட்ரோய்டு என்ற பெருமையை தாங்கி நிற்கும் நகமாக சென்னை உள்ளது. அந்த அளவு தொழிற்சாலைகளும் நிரம்பி வழிகின்றன. இந்தியாவின் பெரு நகரங்களில் ஒன்றாக விளங்கும் சென்னை தனது பாரம்பரியம் மாறாமல் நவீனத்துவத்தையும் தன்னுடன் இணைத்து கம்பீரமாய் தனது வரலாற்றை தாங்கி நிற்கிறது.
384-வது பிறந்த நாள்: இரவு பகலாக எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கிறது. சென்னையில் 1895 ஆம் ஆண்டு முதன் முதலாக டிராம் வண்டி இயக்கப்பட்டது. தற்போது ஓடும் மின்சார ரயில்களுக்கு அதுதான் முன்னோடியாக விளங்கியது. பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் சென்னைக்கு இன்று 384-வது பிறந்த நாளாகும்.
-
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications