சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி.. இறுதி வரை திக் திக்.. சவால் தந்த செல்வம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகமே ஆவலோடு எதிர்பார்த்த 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது. இதில் சென்னையின் இதயமாகக் கருதப்படும் 'சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி' தொகுதியின் முடிவுகள் என்னவாக இருக்கும் என்பதே இப்போதைய ஹாட் டாபிக் ஆக இருந்தது. காரணம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் களம் கண்டுள்ளது தான். உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் இருந்தார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் அதன்பிறகு பின்னடைவை சந்திக்க தொடங்கினார். தொடர்ந்து பல சுற்றுக்கு பின்னர் தற்போது உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.

'சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி' தொகுதி எப்போதும் திமுக-வின் எஃகு கோட்டையாகவே இருந்து வருகிறது. கடந்த கால முடிவுகளைப் பார்த்தாலே அது புரியும். பல முறை திமுக தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி வென்ற தொகுதியாகும். கடந்த 2011 தேர்தலில் தான் கருணாநிதி தொகுதி மாறினார். அங்கு 2011ல் திமுக-வின் ஜெ. அன்பழகன் சுமார் 9,203 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Chepauk-Thiruvallikeni Election Results 2026 udhayanidhi stalin victory full details

2016 தேர்தலில் மீண்டும் ஜெ. அன்பழகன் களம் கண்டு, அதிமுக-வின் நூர்ஜகானை 14,164 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். ஆனால் 2021 தேர்தலில் ஜெ அன்பழகன் மறைவிற்கு பின்னர் முதன்முறையாகக் களம் இறங்கிய உதயநிதி ஸ்டாலின், பாமக-வின் கசாலி-யை 69,355 வாக்குகள் என்ற இமாலய வித்தியாசத்தில் தோற்கடித்து மெகா வெற்றியைப் பதிவு செய்தார்.

2026-ல் நிலவரம் என்ன?

இந்த முறை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் சுமார் 2,34,500 மொத்த வாக்காளர்கள் உள்ளனர். இதில் இந்த ஆண்டு வாக்குப்பதிவு மிக ஆச்சரியமான வகையில் 78.4% ஆகப் பதிவாகி இருந்தது. கடந்த 2021-ல் வெறும் 58% ஆக இருந்த வாக்குப்பதிவு, இப்போது சுமார் 20% அதிகரித்திருப்பது அரசியல் கட்சிகளுக்குப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தேர்தலில் தவெக (விஜய்யின் தமிழக வெற்றி கழகம்) சார்பில் களம் இறங்கியுள்ள செல்வர், அதிமுக சார்பில் போட்டியிடும் ஆதி ராஜாராமும் உதயநிதிக்கு கடும் சவாலாக இருப்பார்கள் எனக் கருதப்பட்டது. ஆதிராஜாராம் தான் கடந்த முறை ஸ்டாலினுக்கு எதிராக களம் கண்டவர்.. தொகுதியில் உள்ள பழைய பாரம்பரிய வாக்குகளைத் தக்கவைக்க அதிமுக மும்முரமாகச் செயல்பட்டிருந்தது. பாஜகவின் கூட்டணி பலம் கைகொடுக்கும் என்று நம்பியது. அதேபோல் விஜய்யின் தவெகவும் இளைஞர்களின் வாக்குகள் தங்கள் பக்கம் திரும்பும் என்று நம்பியது. அது பலித்தது

உதயநிதி ஸ்டாலின் ஆரம்பத்தில் முன்னிலையில் இருந்தார். ஆனால் முதல் சுற்று முடிவில் அடியோடு டிரெண்ட் மாறியது. உதயநிதி ஸ்டாலின் பின்னடைவை சந்தித்தார். நேரம் செல்ல செல்ல பின்னடைவை அதிகமானது. தவெக வேட்பாளர் செல்வம் முன்னிலையில் இருந்து வந்தார். எனினும் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தற்போது உதயநிதி ஸ்டாலின் முன்னிலை சுமார் 10 ஆயிரம் வாக்குளை தாண்டி முன்னிலை பெற்றார்.

இறுதி சுற்று முடிவில் உதயநிதி ஸ்டாலின் 58 ஆயிரத்து 110 வாக்குகள் பெற்றார். தவெக வேட்பாளர் செல்வம் 48 ஆயிரத்து 330 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் ராஜராம் 12 ஆயிரத்து 662 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் உதயநிதி ஸ்டாலின் 9780 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் செல்வத்தை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளர் சேகர்பாபு வெற்றி பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக சென்னையில் உள்ள 16 தொகுதியில் 2 தொகுதிகளில் தான் திமுக வென்றுள்ளது. தவெக 16 தொகுதிகளை வெல்லப்போவது உறுதியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+