களைகட்டிய செஸ் ஒலிம்பியாட்... வாவ் இந்த இடத்துல கூடவா செஸ் தீம்.. கலக்கும் சென்னை மக்கள்!
சென்னை : சர்வதேச செஸ் ஒலிம்பியாட்யெட்டி, சென்னை நேப்பியர் பாலத்திற்கு அடுத்தபடியாக, அண்ணா நகரில் உள்ள டீக்கடையிலும் செஸ் தீம் உருவாக்கி, வாடிக்கையாளர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர்.
Recommended Video
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்குகிறது. அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டித் தொடரில், 187 நாடுகளைச் சோ்ந்த 2,000-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள், நடுவா்கள், பயிற்சியாளா்கள் பங்கேற்க உள்ளனா். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெற உள்ள பிரமாண்ட விழாவில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை, பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

உலகமே உற்று நோக்கும் மாமல்லபுரம் 44-வது உலக சதுரங்க ஒலிம்பியாட் போட்டி இன்றுமாலை துவங்கவுள்ள நிலையில், சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசு சார்பில் செஸ்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் ராட்சச பலூன்கள், ஒலிம்பியார் ஜோதி, விழிப்புணர்வு பேரணிகள் என பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகின்றன.

கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரை இதுபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில். தனியார் நிறுவனங்களும் சதுரங்க போட்டிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். சென்னையில், சென்னையின் பிரதான பகுதியில் அமைந்துள்ள நேப்பியர் பாலம் செஸ் போர்டு கட்டங்களைப் போன்று கருப்பு வெள்ளை நிறத்தில் வர்ணம் தீட்டப்பட்டு பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
அந்த வரிசையில், சென்னை அண்ணாநகர் கந்தசாமி கல்லூரிக்கு எதிரே, ஜோசப் என்பவர், தன்னுடைய டீக்கடையில் முழுவதும் செஸ் தீம் உருவாக்கி, செஸ் குறித்த விழிப்புணர்வுடன் தேநீர் அருந்துபவர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார். மேலும், இங்கு தேநீர் அருந்த வருபவர்களுக்கு, மேசையில் செஸ் போர்டுடன் டீ அருந்தும் வாய்ப்பையும் இவர்கள் ஏற்படுத்தி உள்ளனர். நண்பர்களுடன் தேநீர் அருந்த வருபவர்கள் சற்று நேரம் செஸ் விளையாடிவிட்டு செல்கின்றனர்.

அதோடு மட்டுமல்லாமல் ஆர்வமுடன் செல்ஃபியும் எடுத்துகொள்கின்றனர். மேலும், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று விடுமுறை என்பதால், பள்ளி குழந்தைகளும் தங்கள் குடும்பத்தோடு வந்து, இங்கு டீ அருந்திக்கொண்டே செஸ் விளையாடி விட்டு செல்கின்றனர். இருசக்கர வாகனங்களில் வரும் இளைஞர்கள், இந்த கடைக்கு வந்து தங்கள் நண்பர்களோடு நேரம் செலுத்தி தேநீர் அருந்திவிட்டு செல்கின்றனர். ஒட்டுமொத்தத்தில், செஸ் ஒலிம்பியாட்யெட்டி, சென்னையில் களைகட்டியுள்ளது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications